Advertisement

மணிமேகலை பிரசுரத்தின் 41 நூல்கள் வெளியீட்டு விழா

சென்னை:மணிமேகலை பிரசுரத்தின், 41 நுால்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.சென்னையில் நடந்து வரும், 41வது, சென்னை புத்தகக் கண்காட்சியில், மணிமேகலை பிரசுரத்தின், 41 நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில், நடிகர் சிவகுமார் பேசியதாவது:

எந்த வசதியும் இல்லாத காலத்தில், குக்கிராமத்தில் நான் வசித்த போது, பள்ளி பருவத்தில், கல்கண்டு பத்திரிகை வழியாக, என்னை படிக்க துாண்டியவர், தமிழ்வாணன்.பின், கருணாநிதியின், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் உள்ளிட்டவற்றை படித்தேன். அவரின், திரைப்பட வசனங்களை கேட்டு மனப்பாடம் செய்தேன்.இன்று, உலக நாடுகள் அனைத்திலும், யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, கனியன் பூங்குன்றன், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறி, நட்புறவை வளர்த்தார்.

நம் நாடு, இதுவரை, 26 முறை, அன்னியர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இருப்பினும், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் போதிக்கும் அறச்சிந்தனை கொண்டவர்களாய், நாம் இருப்பதால் தான், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளோம். நாம் புத்துணர்வுடன் இருக்க, புத்தகங்களை படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மணிமேகலை பிரசுரத்தின் ஆசிரியர் குழு தலைவர், லேனா தமிழ்வாணன், சென்னை உயர் நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி, வள்ளிநாயகம்...நல்லி குப்புசாமி, நடிகை லஷ்மி, எஸ்.எம்.மனோகரன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலைய தலைவர் ரபியுல்லா, கருணாகரன், கே.வசந்தன், ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement