Advertisement

பனிமூட்டத்தால் விமானங்கள் தாமதம்

சென்னை:சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில், புகை மூட்டம் சூழ்ந்ததால், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.போகி பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும், மக்கள் வீடுகளில் உள்ள, பழைய பொருட்களை எரித்தனர்.
அதனால், சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுவதும், நேற்று அதிகாலை 3:00 மணி முதல் புகை மண்டலம் சூழ்ந்தது.

இதனால், துபாய், சார்ஜா, பக்ரைன், அபுதாபி, மஸ்கட், கொழும்பு, லண்டன், கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து, சென்னை வந்த, 12 விமானங்கள்...சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு, ஐதராபாத், கொழும்பு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு திருப்பி
விடப்பட்டன.

அதேபோல், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய, 30க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில், பல மணி நேரம் தாமதம் ஆனது. காலை, 10:00 மணிக்கு மேல், பனிமூட்டம் விலகியதும், விமான போக்குவரத்து சீரானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement