Advertisement

மூத்த அதிகாரிகளுக்கு ரயில்வே கிடுக்கிப்பிடி

புதுடில்லி:'பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில், ரயில்வே மூத்த அதிகாரிகள், இரு வாரங்களுக்கு, இரு நாட்கள் வீதம் முகாமிட்டு, பணிகளை மேற்பார்வையிட வேண்டும்' என, ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.


அடுத்த நிதியாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பழைய மற்றும் பழுதான வழித்தடங்களை மாற்ற, ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பிரிவு அதிகாரிகளுக்கு, ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதம்:

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நடக்கும், தண்டவாளம் புதுப்பித்தல், பால சீரமைப்பு, ஆளில்லா லெவல் கிராசிங்குகளை நீக்குதல், நடைமேடைகளை உயர்த்துதல் மற்றும் வழித்தட பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில், துவக்கத்தில் ஒரு வாரமும், அதன்பின், 14 நாட்களுக்கு இரு நாட்கள் வீதமும், அதிகாரிகள் தங்கியிருந்து, அங்கு நடக்கும் திட்டப் பணிகளுக்கு தேவையான வழிமுறைகளை கூறி, செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Nagarajan S - Chennai,இந்தியா

  அப்படிபோடு ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு பல லக்ஷம் சம்பளம் வாங்கிக்கொண்டு கீழ் அதிகாரிகளை விரட்டிக்கொண்டு காலம் கடத்திய உயர்மட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே வாரியம் ஆப்பு வைத்து விட்டது நல்லத்திற்கு தான்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இதற்க்கு முன்னால் ஒரு செய்தி இதேபோன்று தினமலரில் வெளிவந்தது அதாவது அனைத்து உயர் அதிகாரிகளும் இரண்டாவது வகுப்பில் பயணம் செய்து பொது மக்களோடு மக்களாக பயணிக்கவேண்டும் என்று?? அதுபோல்தான் இதுவும்,? நாட்டில் எப்படி அனைத்து நதிகளும் ஒன்றாக இனைந்து தற்போது விவசாயம் செழிக்கிறதோ , கங்கை சுத்தமாக ஓடுகிறதோ அதேபோல் எல்லாமே நடந்தால் நன்றாகத்தான் இருக்கும், வந்தே மாதரம்

 • vnatarajan - chennai,இந்தியா

  2017 -2018 ம் நிதி யாண்டின் முடிவில் அரசாங்கத்திற்கு டாக்ஸ் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். அதை மக்களுக்கு பயன்பெற நல்ல முறையில் செலவழிப்பதற்குத்தான் இப்படிப்பட்ட திட்டங்களை பிஜேபி அரசு கொண்டுவருகிறது. ஆனால் அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை மேல்பார்வையிட சில அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அப்போதுதான் ரயில்வேயில் எதிர்பார்த்த ரிசல்ட்/ ப்ரொடக்டிவிட்டி கிடைக்கும்

 • thiru - Chennai,இந்தியா

  ரயில்வே உயர் அதிகாரிகள் இத்தனை காலமும் வேலை செய்யாம பென்ச்ச தேச்சாச்சு திடீர்ன்னு எப்படி வேலை செய்வாங்க.. இந்த மாதிரி வேலை யெல்லாம் தனியாரிடம் குடுத்தரனும்.. இல்லைன்னா எத்தனை ஆட்சி மாறினாலும் இவனுங்க வேலை செய்ய மாட்டானுக...

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  இப்படி அணைத்து விஷயத்திலும் கவனம் செலுத்துவது தான் பி ஜெ பி அரசின் அழகு.

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  நல்ல யோசனை. நெறய மாற்றங்கள் முன்னேற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கு.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இவனுக தென் மாநிலங்கள்ள நல்ல நடவடிக்கை எடுத்துட்டாலும்????

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நைனா ஓபன் ஸ்டேட்மென்ட் உடுங்க... மகாராஷ்டிரம், டில்லி,உத்திர பிரதேசம் , மத்திய பிரதேசம், குசராத் மாநிலத்துல ரயில்வே பெரச்சனைகளை சரி பண்ணி அடுத்த பாராளுமன்ற தேர்தல்ல கெடைக்கப்போற தோல்விய தவுக்க முயற்சி செய்றோம்னு சொன்னா பொருத்தமா இருக்குமே நைனா.

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Pl also order not drink and enjoy during those periods. They may think they are going for holidays on govt expense.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement