Advertisement

தற்கொலைக்கு கந்துவட்டி காரணமில்லை: போலீஸ் விளக்கம்

சென்னை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு இசக்கி முத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கத்துவட்டி கொடுமையால் நடந்த இந்த தற்கொலை தமிழகத்தையே உலுக்கி போட்டது.


இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் இசக்கிமுத்துவின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்குமாறு நெல்லை மாநகர கமிஷ்னரிடம் மனு செய்தார்.


இதுதொடர்பாக போலீசார் அளித்துள்ள பதிலில், கடன் கொடுத்தவர்களோ, காவல்துறையினரோ இசக்கிமுத்துவை மிரட்டவில்லை. பல நபர்களிடம் கடனாக பெற்ற பணத்தை திரும்பக் கொடுக்க மனமில்லாததாலும், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிமுத்து கடன் கொடுத்தவர்கள் மீது புகார் அளித்ததாக கூறப்பட்டுள்ளது. கந்துவட்டி காரணம் இல்லை எனவும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டதாலேயே இசக்கிமுத்து தற்கொலை செய்துகொண்டதாக அந்த அறிக்கையில் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (47)

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  எனக்கு என்னமோ, அந்த ஊரு போலிசும் கந்துவட்டிக்காரனிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருப்பார்கள் போல தெரியுது. பெருசா கண்டுபிடித்துவிட்டாங்க, தற்கொலைக்கான காரணத்தை, ஒரு அவார்டு பார்சல்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  தற்கொலை செய்துகொண்டவன், திருநெல்வேலியில் கந்துவட்டிக்கு கடன்வாங்கி, அதை திருப்பூரில் கந்துவட்டிக்கு விட்டு காசு பார்த்தவன். திருப்பூரில் வசூல் சரியில்லாததால், இவன் மாட்டிக்கொண்டான். அவ்வளவுதான் விஷயம். செத்தவனும் ஒழுங்காக தொழில் செய்தவன் அல்ல. பிறகு ஏன் இவ்வளவு கூப்பாடு?? இவனிடம் தொகையை திரும்பக்கேட்டது தவறு என்றால், இவன் கந்துவட்டிக்கு கடன் கொடுத்தது மட்டும் நியாயமா? இவன் திருப்பூரில் என்ன அட்டகாசம் செய்தான் என்று யாருக்கு தெரியும்? இவன் மீது புகார் சொல்லி இவனிடம் கந்துவட்டிக்கு கடன்வாங்கியவன் எவனாவது தீக்குளித்திருந்தாலும் போலீஸ் இப்படித்தான் சொல்லியிருக்கும். கடன் வாங்குபவனுக்கு அறிவு எங்கே போனது???

 • rajesh -

  இது தான் தமிழ் நாடு

 • Srinivasan Balasubramaniam - Chennai,இந்தியா

  இப்படி சொன்ன நீங்களும் முதல்ல போலீசே இல்லை. மானகெட்டவனுங்களா அரசியல்வாதிகளை விட நீங்க சொன்ன இந்த பச்சபொய் பிரமாதம். நாங்களும் நம்பிட்டோம். ஒரு மனுஷனுக்கு உயிரை விட பணம் முக்கியமா?

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  போலீசிற்கு மாமூல் கிடைத்து விடுகிறது . பணமில்லாதவனுக்கு எப்படி சப்போர்ட்டா பேசும் போலீஸ்.. இது ஒன்னும் உண்மையான ரிப்போர்ட் கிடையாதுன்னு நல்லாவே புரியுது மக்களுக்கு. வீண் பெருமை வேண்டாம்.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இந்த முடிவு போலீஸ்கிட்டேந்து எதிர்பாத்ததுதா நைனா...பாவம் புள்ளையாண்டான் புள்ளைகளையும் எரிச்சு என்ன கொடும நைனா மனசு நொறுங்குது நைனா. கந்துவட்டிக்காரனுவ திருந்தலென ஆண்டவன் மொத்தத்துக்கு கந்துவட்டிக்காரனையும் அவனுக்கு பின்னால இருக்க அரசியல்வெயாதியும் கதற உட்ருவா நைனா

 • AURPUTHAMANI - Accra,கானா

  இங்கு ஏழை வாழவே முடியாதா?அப்படியே இருந்தாலும் அந்த அளவுக்கு மிரட்டி கேட்டவன் தானே தற்கொலைக்கு தூண்டினான்?அவன் எவ்வளவு வட்டி கேட்டான்?

 • K.Palanivelu - Toronto,கனடா

  கடன்கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாலேயே தற்கொலை செய்துகொண்டார்கள் என சப்பைக்கட்டு கட்டும்பொலிஸார் அசலுடன் அநியாயவட்டியையும் சேர்த்து கேட்டதாலேதானே அந்த விபரீதமுடிவை நாடினார்கள் என்பதை மறைத்தது ஏன்?

 • senthil kumar.k - pondy,இந்தியா

  இந்த போலீஸ் மிரட்டிய ஆடியோவும் வெளிவந்தது....கலெக்ட்டர் கிட்ட 3 முறை மனுகொடுத்ததும் அனைவருக்கும் தெரியும்,இதை எல்லாம் ஒரேயடியாக மூடி மறைக்கப்பட்டுள்ளது...இதுல என்ன சட்டம், நியாயம்

 • Thangavel -

  இதற்க்கு எதற்கு IPS படிச்சீங்க

 • ashokperumal - puducherry,இந்தியா

  மனுஷன மனுஷன் சாப்பிடறான்ன்டா தம்பிப்பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மகவலே

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  இந்த வழக்கை விசாரணை செய்ய மனமில்லாமல் போலீஸ்காரனும் தீ குளித்தால் இந்த கதையை நம்பலாம்..

 • A.Navarajan - Coimbatore ,இந்தியா

  இந்த சம்பவம் தொடர்பாக வெளியான கார்டூனும், கார்டூனை வரைந்தவரை கைது செய்ததும் ஞாபகத்துக்கு வருகிறது. மனுநீதிச் சோழன் வாழ்ந்த நாட்டில் தானே வாழ்கிறோம் ?

 • annamalai - Dindigul,இந்தியா

  Kindly this picture . Plz understand .. thanks

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லணும் என்பார்கள். மதிகெட்ட மந்திகள் ஆணையில் லஞ்ச போலீஸ் முட்டாள்கள் போல சொல்லியிருப்பது அவர்களின் கொடூர புத்தியை தான் படம் போட்டு காட்டுகிறது. பணத்தை வைத்திருந்தும் கொடுக்காதவன் எதற்கடா சாக வேண்டும்? அப்போ தீ வைத்து கொன்றது பக்கத்தில் இருக்கும் போலீஸ் தானோ என்ற கேள்வி இப்போது எழுகிறது. கலெக்டர் சரியென்று சொல்ல, கந்துவட்டிக்காரன் லஞ்சம் கொடுத்து, போலீசை இதை செய்ய சொன்னானோ என்று விசாரிக்க வேண்டும்?

 • Hari - Rejavik,ஐஸ்லாந்து

  Manasatchi nu onu ungaluku iruka.

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  அடப்பாவிங்களா??? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா??? மனித உடலுக்குள் மிருக இதயம்....சே..இப்படி சொல்வது மிருகங்களை கேவலப்படுத்துவது போலிருக்கும்...

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  காவல்துறை கிடைத்திருக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட நபர் மிரட்டுவதற்க்காக கலெக்டர் அலுவலகம் வரவில்லை .யாரையும் திருப்தி படுத்துவதற்காக காவல்துறை இவ்வாறு நடந்துகொள்கிறது. .ஆமாப்பா ஆமா..அவங்க தண்ணீர்னு நெனச்சி மண்ணெண்ணெய்ய தவறுதலாக ஊத்திகிட்டாங்க ...?

 • aanthai - Toronto,கனடா

  கொடுக்க மனமில்லாமல் என்றால் , பணம் இருந்தும் கொடுக்க விரும்பவில்லை என்று அர்த்தமாகிறது . தன உயிரையே எரித்துக்கொண்டபின் அந்தப்பணம் அவருக்கு எந்த வகையில் உபயோகப்படப்போகிறது . இறந்தபிறகும் இறந்தவர்மேல் குற்றம் கூறும் விதமாக வார்த்தை கையாளப்பட்டுள்ளது .அரசையும் ஏவல் துறையும் பாதுகாப்பதற்காக கரணம் சொல்லப்பட்டுள்ளது . ஏவல்துறையே பினாமியாக கந்துவட்டி நடத்துகின்றதோ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  யாரையோ காப்பாத்துரைப்போல தோணுது.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  எனக்கு புரியல.. கந்துவட்டி காரணம் இல்லை ஆனால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டதாலேயே தற்கொலை. திருப்பி குடுக்க மனசு இல்லாதவன் தற்கொலை பண்ணிக்குவானா ?

 • sridhar -

  இதற்கு விளக்கமளித்தர்கள் குடும்பத்தில் நடந்திருந்தால் அதற்கும் இப்படி தான் விளக்கம் அளிப்பார்களா

 • Naduvar - Toronto,கனடா

  இந்த புகைப்படத்தை தயவுசெய்து இனி எங்கும் பயன்படுத்தாதீர்...மனம் பதறுகிறது...

 • Siva - Aruvankadu,இந்தியா

  2018 ன்.. சிறந்த வசனம்..கொடுக்க மனமில்லாததால் தற்கொலை.உயிரை விட‌ துணிந்தவனுக்கு பணம் ஒரு பொருட்டா?.

 • jagan - Chennai,இந்தியா

  பார்க்க கஷ்டமா இருக்கு

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அவங்க தான் பலமுறை கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாத்துங்கள் என்று போலீஸ் மற்றும் கலெக்டர் இடம் மனு கொடுத்து உள்ளார்கள் . அன்ஹா மனுக்களை பார்த்தாலே உண்மை தெரியும் . ஆனால் பிஜேபி பினாமி ஆட்சியில் பாலரும் தேனாறும் ஓடுவதாக தான் சொல்லமுடியும் ?

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஆகா பழனி பன்னீர் பேசுவதுபோலிருக்கு . என்ன ஒரு விசாரணை என்ன ஒரு காரணம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கடனால் தற்கொலை செய்துகொள்பவர்களில் மிகப்பெரும்பாலானோர் தனது சொந்தப்பயன்பாட்டுக்காக  கடன்  வாங்கியவர்களில்லை. அவர்கள் கந்துவட்டிக்காரர்களின் சப் ஏஜெண்டுகள்தான். இருபக்கத்தொல்லைகளையும் தாங்கயியலாமல் மோசமாக முடிவெடுப்பவர்கள்தான்.பெரிய கந்துவட்டிக்காரர்கள் போலீஸ் அல்லது அரசு அதிகாரிகள் துணையோடே தொழில் செய்கிறார்கள். சப் ஏஜென்டுகளுக்கோ வசூல் செய்துதர கூலிப்படை இருக்காது . கடன்வாங்கியோர் திருப்பித்தர வக்கில்லாமல் போனால் இந்த இடைத்தரகர் தன்னைக்காத்துக்கொள்ள கடைசியாக கந்துவட்டிசட்டப்படி போலீஸுக்குப்போவார். ஆனால் தொழில்முறை ஃபைனான்ஸ் சப் ஏஜெண்டுகளை கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தால் காப்பாற்றவே முடியாது.அந்தோ பரிதாபம்.

 • Endless - Chennai,இந்தியா

  மிகவும் வருத்தம் அளிக்கிறது...

 • mindum vasantham - madurai,இந்தியா

  Kandhu vatti periya kodumai

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  உயிர் பெரிதா, இல்லை பணம் பெரிதா. அதுவும் குடும்பமே அழிந்தாலும் பணத்தை மட்டும் திருப்பி கொடுக்கவே கூடாது என்று எவனாவது நினைப்பானா? அப்படி ஒளித்துவைத்த பணத்தை உயிர் பிரிந்தபின் வந்து எடுத்து செலவு செய்ய முடியுமா? இது என்ன கொடுமை?

 • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

  கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை என்றால் என்ன பொருள் ? தன்னையே எரித்துக் கொள்பவன் சொல்வது உண்மையா ? அரசு, ஆளுங்கட்சி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சொல்வது உண்மையா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement