Advertisement

மோடியின் ஆடைகளுக்கு செலவு செய்வது யார்?

புதுடில்லி : பிரதமர் மோடி அணியும் ஆடைகளுக்கு, அரசு எவ்வளவு செலவிடுகிறது? என்ற கேள்விக்கு, 'அவரே தான் செலவு செய்கிறார்' என, பதிலளிக்கப்பட்டு உள்ளது.


சமூக ஆர்வலர், ரோஹித் சபர்வால் என்பவர், இதுவரை பிரதமர்களின் ஆடைகளுக்காக, அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது? என, தகவலறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.


அதற்கு, பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், 'இது, தனிப்பட்ட விபரம் என்பதால், பிரதமர் அலுவலகத்தில், அதற்கான விபரம் இல்லை' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.


இது குறித்து, சபர்வால் கூறியதாவது: பிரதமர் அலுவலகத்தின் பதிலில் இருந்து, இதுவரை பிரதமராக இருந்தவர்கள், தங்களுடைய ஆடைகளுக்கான செலவை, அவர்களே செய்துள்ளனர் என்பது தெரிகிறது. அதன்படி, ஆடை பிரியரான, பிரதமர் மோடி, தன்னுடைய ஆடைகளுக்கே தானே செலவு செய்கிறார் என்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • Ramakrishnan - Attur,இந்தியா

  கர்மவீரர் காமராஜரை போல் எளிமையான ஆடை அணியலாம் மதிப்பு ஆடையில் அல்ல மக்களின் தேவைகளை அறிந்து செய்வதில் உள்ளது

 • Raman - Chennai,இந்தியா

  There is guy in the name..matha jathi...he writes always against nation's interest, against govt, in other words anything good he does not like, disgraceful guys...Raman

 • M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

  //ஆடை பிரியரான, பிரதமர் மோடி// உனக்கு ஏன்டா எரியுது? நேரு, ஜே ஜே, சசிகலா, ராகுல், தினகரன், மன்மோகன் சிங், எல்லாரும் நல்லாத்தான் டிரஸ் போட்டார்கள்? அப்ப யார் காசு கொடுத்தார்கள்? அதையும் கேளு.

 • RamRV -

  அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமல்ல அவர்களது மனைவியருக்கும் கோடிக்கணக்கில் உடைகளுக்காக செலவழிக்கிறார்கள். ஆனால் நம் பிரதமர், திரு அப்துல் கலாம் போல தனது சொந்த உபயோகப் பொருட்களுக்கு தனது சொந்தப் பணத்தையே செலவழிக்கிறார். தவிர பார்ப்பவர்கள் மத்தியில் மதிப்பைப் பெற்று அவர்களது எண்ண ஓட்டத்தை தமக்கும் நாட்டுக்கும் சாதகமாகத் திருப்ப வேண்டும் என்ற உத்தியில் தான் அவர் உடைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார். தனது அரசியல் பணி முடிந்த பின் அவர் ஒரு துறவியாகவே வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

 • B.Indira - thane,இந்தியா

  அவரே செலவு செயகிறார் என்பது ஏன் நம்பும் படியாக இல்லை? அவரது சொத்து மதிப்பு குறைந்து வருகிறது. சம்பளத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுப்பதில்லை .மண்மோகன்சிங்கையோ எப்போதும் பளீர் சட்டையோடு வெளியில் உலாத்தும் சிதம்பரத்தையோ யாரும் கேள்வி கேட்பதில்லை ஏன் ?

 • sankaseshan - mumbai,இந்தியா

  As per your statement he has begged for his dress.It is better than looting India, s money transferring to Italy.

 • B.Indira - thane,இந்தியா

  ,10 லட்சம்கோட்டுகொடுத்தவர் ரமேஷ் குமார்மோடிக்கு நண்பர்.அவரதுபிள்ளையின் கல்யாணத்திற்காக அழைப்பிதழுடன் அவரது பிள்ளை அதை கொடுத்தார் .கல்யாணத்திற்கு வர முடியாததால் கல்யாணத்தன்று அதை அணிந்து கொள்வதாக மோடி கூறினார்..அதன்படிஜனவரி 26 அன்று அதை அணிந்து கொண்டார் .ஆனால்அதன் விலை 10 லட்சம் இருக்காது என்கிறார் ரமேஷ் குமார் .அதை ஏலம்விட்டு சுமார் 4கோடியைகங்கையை சுத்தம் செய்ய நமாமி கங்கைக்கு கொடுத்து விட்டார்.இதுபோல் முதல்வராக இருந்த போதும் உடைமைகளை ஏலம் விட்டு தர்ம ஸ்தாபனங்களுக்கு கொடுத்திருக்கிறார் .

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "அவரேதான் செலவு செய்கிறார்" என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. அது மக்களின் வரிப்பணமாகவோ, கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்பளிப்பாகவோ இருக்கும்.

 • Chinnannan - அ,இந்தியா

  நன்றி

 • Chinnannan - அ,இந்தியா

  So Modi got alot money? The money came from Where ? His salary how much? Why the guy never rise again the question? Every buddy questions for their publicity.

 • சிவம் -

  இங்கே மோடிஜி க்கு எதிராக கருத்து பதிவு செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். பல ஆயிரம் கோடி ஊழல் செய்த முந்தைய கூட்டணி அரசுகள் பற்றி பேசவோ அதை பற்றிய செய்திகள் வரும் போதோ, நவதுவாரங்களை மூடிக்கொண்டுவிடுவார்கள். நாட்டின் வளர்ச்சியே பாதிக்கபட்டுவிடும் என்று மோடிஜி உடையின் மதிப்பு பற்றி ஒரு கிறுக்கன் கேள்வி கேட்டுள்ளான். அதை பற்றி அலசும் ஒரு கூட்டம். ஆனால் பல ஆயிரம் கோடி ஏப்பம் விட்ட அரசியல்வாதிகள் மத்தியில் சில ஆயிரம் மதிப்புள்ள உடைகளை மட்டும் பற்றி பேசப்படுபவர், அதிஷ்டம் இல்லாதவர்தான்.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  அந்த 10 லட்சம் கோட்டும் சொந்த காசுதானா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement