Advertisement

'வலுவான காரணமின்றி வழக்கை விசாரிக்க முடியாது'

புதுடில்லி : மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும், 'அபினவ் பாரத்' அமைப்பின் நிர்வாகியுமான, பங்கஜ் பட்னிஸ், தேசத் தந்தை, மஹாத்மா காந்தி படுகொலை வழக்கை, மீண்டும் விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை பரிசீலித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு கூறியதாவது: வழக்கில் தொடர்பு உள்ளவரின் தகுதி அடிப்படையில், வழக்கை நடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியாது; சட்டப்படி அவசியம் இருந்தால் மட்டுமே, வழக்கை விசாரிக்க முடியும்.

மஹாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டு, பல ஆண்டுகள் கடந்த பின், மிகுந்த தாமதத்துடன், தற்போது மனு தாக்கல் செய்யப்படுகிறது. அளவு கடந்த தாமதத்தால், வழக்கு தொடர்பான ஒவ்வொரு முக்கிய ஆதாரமும் கிடைக்க வழி இல்லாமல் போகிறது. தவிர, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய வலுவான காரணம் இருக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை ஏற்பதற்கு வலுவான காரணங்களை மனுதாரர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (15)

 • rajan - kerala,இந்தியா

  சபாஷ் ஜட்ஜ் ஐயா. வழக்கை விசாரிக்க வலுவான காரணமும் வேண்டும் தண்டனை வழங்க வலுவான ஆதாரமும் வேண்டும். ஆமாம் அதுசரி இந்த இரு வலுவான காரணம் வலுவான ஆதரமின்மை இரண்டும் தானே நம்ம ஜனநாயகத்தை அல்லாட வைக்குது சாமியோவ். குற்றம் செய்தவனை தண்டிக்க சட்டம் அல்லாடுது இப்படி தான் ஒரு நிரபராதி நீதி வேண்டி வழக்கு தொடுத்து அவனை பல குற்றவாளிகள் ஓன்று சேர்ந்து எளிதில் தண்டித்து விடுவார்கள். இதுவும் ஒரு வகை ஜனநாயகமோ. சபாஷ் சபாஷ் சாமியோவ். கவலை வேண்டாம் குற்றம் புரிந்தவனை அந்த காலம் புடம் போட்டு எடுத்துவிடும் அந்த கருட புராண காலம் வரும் போது. வாழ்த்துக்கள்.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பிஜேபி சொம்புகள் தெனம் ஒரு வழக்க கொண்டாந்து வரலாறு மாற்றத்துக்கு ரொம்ப பாடுபடறானுவ நைனா

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  காந்தி நாட்டுக்கு எவ்வளவோ நல்லது செய்தாலும் கிலாபத் இயக்கத்தை துவக்கியது தீவீரவாத முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுத்து நாட்டின் கோரப் பிரிவினையில் முடிந்தது அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் இரு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்கவே வாய்ப்பில்லையென அவர் நினைத்திருந்தால் முழுமையான பிரிவினையையே ஆதரித்திருக்கவேண்டும் அல்லது தேசப் பிரிவினையை முழுமையாக எதிர்த்திருக்க வேண்டும் தவறான முடிவுகளால் நிரந்தர தலைவலிகளுக்கு காரணமாகிவிட்டார்

  • Raman Muthuswamy - Bangalore,இந்தியா

   பண்டிதர் நேருவை பழித்தவன் நீ தான் பரம அயோக்கியன் .. நான் மட்டும் வக்கீலாக இருப்பின் உன்னை கூண்டில் ஏற்றி விடுவேன் .. உரிய தண்டனையையும் பெற்றுத் தர என்னால் இயலும் ..

  • rajan - kerala,இந்தியா

   எல்லாவற்றிக்கும் மேலாக பிரிட்டிஷார் ஜனநாயகம் தழைக்காதிருக்கும் படி ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் சட்டமும் அமைத்து கொடுத்து விட்டார்களே.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   முதலாம் உலகப்போரின் இறுதியில் பிரிட்டன் துருக்கியை துண்டாடி, அதை வெற்றிபெற்ற நாடுகளோடு பகிர்ந்துகொண்டது, துருக்கி சுல்தானுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கிலாபத் இயக்ககத்தை தோற்றுவித்தார்கள், இந்தியாவில் மஹாமத் அலி., சௌகத் அலி என்கிற அலி சகோதரர்களால் கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது, காந்தி இவர்களின் இயக்கத்தை ஆதரித்ததன் மூலம் இந்து முஸ்லீம் இருவரும் நெருக்கமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டம் நடத்த வாய்ப்பு கிடைத்தது, இஸ்லாமியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கை 1940 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தான் ஜின்னா அவர்கள் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார், 1946 க்கு பிறகு அரசில் சேர காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார்கள், அதை காங்கிரஸ் ஏற்கவில்லை, அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது, அதன் பிறகு தான் கல்கத்தாவில் அதை தொடர்ந்து பீகார், மும்பை போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது, ஆர்.எஸ்.எஸ். இன் மூளைசலவைக்கு கோட்ஸே பலிக்கடாவாகி விட்டார், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு ஆரம்பத்திலேயே காந்தியையும், நேருவையும் புடிக்காது, காரணம் இருவருக்கும் இருந்த மக்கள் செல்வாக்கு , ஒருவரை கொலை செய்து பலி தீர்த்துக் கொண்டார்கள், நேருவை அவர் செத்து பல ஆண்டுகளுக்கு பின்பு அவரை கொச்சை படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள், ஆர்.எஸ்.எஸ். தவிர அணைத்து தரப்பு மக்களும் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பாடுபட்டார்கள்,

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   காந்தி இருந்திருந்தால் நேருவின் அடாவடிகள் ஒருவேளை குறைந்த அளவில் இருந்திருக்கலாம்... காந்தியை கொல்வதால் நேரு குடும்பத்துக்கே அதிக லாபம் இருந்தது. நேத்தாஜியை தேசவிரோத குற்றவாளி போல நடத்தியதற்கு காங்கிரஸ் தக்க விலை கொடுத்தே ஆகவேண்டும்... இந்தியாவை கம்முனிச நாடாக மாற்ற காங்கிரஸ் பல வழிகளில் முயல்கிறது... சட்டவிரோதமாக முதலில் செக்குலரிஸம் என்று சேர்த்தார்கள்... பிறகு மத சார்பற்ற என்று சேர்த்தார்கள்...

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  jaihind unakkum ithey thandanai than kodukkanum

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காந்தியின் உடலை பரிசோதனை செய்யவில்லை... அதுமட்டுமல்ல நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது?

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  தேவை இல்லாத வழக்கு.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பத்து லட்சம் ரூபாய் அபராதம். ஆறு மாசம் காதி சர்வோதயா கடையில் இலவசமாக சுத்தம் செய்து, துணி மடிக்கும் வேலை செய்ய வேண்டுமென்று தீர்ப்பு கொடுங்கள். இனிமேல் வரும் கோட்ஸே பக்தர்களுக்கு பாடமாக இருக்கும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   அது கவர்னரோட வேலை என்பதாலா?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஆனால், கோட்ஸே இறந்த ஆவணங்களுக்கு பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இவனுவோளுக்கு வேற வேலையே இல்ல...

  • balakrishnan - coimbatore,இந்தியா

   அரசு பல விஷயங்களில் தோல்வி அடைந்துவிட்டது, அதை மறைக்க இதுபோன்ற செப்படி வித்தைகள் செய்துக் கொண்டே இருப்பார்கள், நாட்டை ஆள்வது என்றால் சும்மாவா, எவ்வளவு பொய்கள் சொல்லவேண்டி இருக்குது,

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement