Advertisement

சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்களின் வரி ஏய்ப்பு ரூ.5,000 கோடி!

சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.


சசி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அவர்கள் வாங்கிக் குவித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், கணக்கில் வராத சொத்து, பணம், நகை மற்றும் முதலீடுகள் என, தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதால், வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவுக்குப் பின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தாங்கள் குவித்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கினர்.


அவர்களை ரகசியமாக, பல மாதங்களாக கண்காணித்து வந்த, வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு, சசிகலாவின் கும்பலில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்' உதவியுடன், நண்பர்கள், உறவினர்கள், புரோக்கர்கள், வேலையாட்கள் பெயரிலான முதலீடுகள் உள்ளிட்ட, பல விபரங்களை திரட்டினர்.


'மிடாஸ்' ஆலை:
அதன் அடிப்படையில், 2017 நவ., 9 முதல், 13 வரை, தமிழகம் முழுவதும், ஒரே நேரத்தில்,
215 இடங்களில் சோதனை நடத்தினர். அதில், சென்னையில் அதிகபட்சமாக, 115 இடங்களில் சோதனை நடந்தது.


'மிடாஸ்' மதுபான ஆலை, இளவரசியின் வீடு, அவரது மகனும், ஜெயா, 'டிவி' தலைமை அதிகாரியுமான விவேக், அவரின் சகோதரிகள், கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெ.,வின் உதவியாளர் பூங்குன்றன், சசி சகோதரர் திவாகரன் உள்ளிட்ட, பலரது வீடு மற்றும் அலுவலகங்கள், சோதனை வளையத்தில் சிக்கின.


இதில், முதல் கட்டமாக, 1,450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. பின், ஜெ., வசித்த, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடத்தி, மின்னணு ஆவணங்கள், சொத்துப் பத்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும், 20க்கும் அதிக மான போலி நிறுவனங்களை நடத்தி, அவற்றின் மூலம் நடைபெற்ற, பல கோடி ரூபாய், பரிவர்த்தனைகள் குறித்த விபரங்களும் சிக்கின. இதை அறிந்து, நாடே அதிர்ந்தது.


இந்நிலையில், சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்து, அதன் வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்துள்ளது.


முடக்கம்:
இது தொடர்பாக, தமிழக வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட, அவரது கும்பலுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிக்கிய ஆவணங்களை, இரு மாதங்களுக்கும் மேலாக, ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில், விவேக், ஷகிலா, பூங்குன்றன், கிருஷ்ணபிரியா
உள்ளிட்ட, பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. சசிகலாவுக்கு, நெருக்கமானவர்களிடமும் விசாரித்து வருகிறோம்.


அவர்களுக்கு நெருங்கிய தொடர்புடைய, 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்களிலும், 2017 நவ., 28ல் சோதனை நடத்தினோம். அதிலும், பல விபரங்கள் கிடைத்தன. அவற்றின் மூலம், தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, வளைத்துப் போட்டிருப்பது தெரிய வந்தது; அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்; 100க்கும் மேலான வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளோம்.


ஜெ., வீட்டில் சிக்கிய ஆவணங்களில், பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. சசிகலா, இளவரசி, உறவினர் கலியபெருமாள் ஆகியோர் பெயரில், நிறைய சொத்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர, மிடாஸ் மதுபான ஆலை வரி ஏய்ப்பு, போலி நிறுவன பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை, ஆய்வு செய்தோம்.


உறுதி:
அதில், இதுவரை, 4,600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டறிந்து உள்ளோம்; கணக்கில் வராத, ஏராள சொத்துகள் மற்றும் இதர முதலீடுளை கண்டறிந்துள்ளோம். இந்த சோதனையில் தோண்டத் தோண்ட, கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு மற்றும் சொத்துக் குவிப்பு விபரங்கள் கிடைத்து வருகின்றன. இது, அதிர்ச்சி தருவதாக உள்ளது.


மேலும், உடல்நிலை காரணமாக, விசாரணைக்கு வராத, திவாகரன் போன்றோர், பல தகவல்களை தரக்கூடும். ஆய்வு மற்றும் விசாரணை, இன்னும் முடியாததால், 5,௦௦௦ கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது உறுதி. இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (73)

 • venkatesh - coimbatore,இந்தியா

  அப்போ இதனை ஆண்டுகள் வருமான வரித்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்ததா.?இல்லை அவர்களுக்கும் சேர வேண்டியது பொய் கொண்டு இருந்ததா..வாங்கற சம்பளத்துக்கு ஒரு பயலும் வேலை செய்வதில்லை செய்பவனை மேல இருப்பவன் விடுவதில்லை

 • POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ

  சசிகலா தலைமையில் அவரது குடும்பத்தார் தமிழக அப்பாவி மக்களை சுரண்டி ,ஏமாற்றி அடித்த கூட்டு கொள்ளை . இவற்றுக்கெல்லாம் மூல காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை அறிவில்லா மக்கள் ஏற்று கொள்ள மறுப்பர் .

 • aanthai - Toronto,கனடா

  பணப்பேய்க்கள் வாழ்த்த இடத்தில பூதங்கள்தான் கிளம்பும் .

 • karthi - chennai,இந்தியா

  வரி இணைப்பே 5000 கோடி என்றால், கொள்ளை அடித்த வருமானம் எவ்வளவு இருக்கும்? அப்படி கொள்ளை அடித்த சொத்துக்களை வெளி நாட்டில் டெபாசிட் செய்து இருப்பார்களோ? மத்திய அரசு இன்னும் அவற்றை கண்டு பிடிக்கவில்லையா? மாபியா கும்பல் கொள்ளை அடித்த சொத்துக்களை, டெபாசிட் செய்து உள்ள பானங்களை மத்திய அரசு பறிமுதல் செய்து விசாரணை நடத்தினால், மாபியா கும்பலின் ஆட்டம் கிளோஸ். தினகரன் தமிழ்நாட்டை விட்டு சிங்கப்பூர் ஓடிவிடுவான்.

 • Agrigators - Chennai,இந்தியா

  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த 5000 கோடி யாருக்கு பெரிது? வருமானவரித்துறைக்கு பெரிதா? அல்லது சசிகலா கும்பலுக்கு பெரிதா? அல்லது தமிழக அரசுக்கு பெரிதா? மத்திய அரசுக்கு பெரிதா? அல்லது அரசியல் சட்டத்திற்கு பெரிதா?. சாதாரண மனிதனுக்கு மட்டுமே பெரிது. இதெற்கெல்லாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?.

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  அப்போ தியாகத்தலைவி சின்னம்மா முதலமைச்சராவது உறுதி. தமிழக மக்கள் யார் அதிகமாக திருடுகிறார்களோ அவர்களை தான் கௌரவிப்பார்கள். குவார்ட்டர் பிரியாணி கண்டிப்பா உண்டு

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இது தவறான செய்தி, 5 .2 லட்சம் கோடி இந்தியாவில், உலக அளவில் சொத்துக்கள் என்று இருந்திருக்கவேண்டும்?????

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டாஸ்மாக் நாடு மிகவும் பணக்கார நாடு? ஒரு வேலைக்காரியும் அவர்தம் குடும்பங்களும் வரி ஏய்ப்பு ரூ.5000 கோடி அப்போ 30 % வரி என்று எடுத்துக் கொண்டால் கூட ரூ.16 ,667 கோடி சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது என்று தெரிகின்றது. நடிகை ஜெயலலிதா என்னும் முதல் ?????? அமைச்சர் ரூ.1 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் என்று எண்ணும் (ஏமாற்றும்) பட்சத்தில் ரூ.1 க்கே சில வருடங்களில் இவ்வளுவு பணம் சேருமா??? ஐன்ஸ்டீனை தான் கூப்பிடவேண்டும் ஒன்றும் இல்லாததிலிருந்து இவ்வளவு உருவாக்கமுடியும் என்றால்?????அம்மா அடிமைகள் இதுவும் இல்லை என்று சொல்வார்களோ???

 • karthikeyan -

  பாஜக 10% வாங்கிக் கொண்டு விட்டு விடுவார்கள்

 • Visu Iyer - chennai,இந்தியா

  போதிய ஆதாரம் நிரூபிக்க படவில்லை.. என்று விட்டு விடலாமா

 • Indhuindian - Chennai,இந்தியா

  5000 கோடி வரிஏய்ப்பு அப்படியென்றால் வருமானம் சுமார் 17000 முதல் 18000 கோடி. இவ்வளவு வருமானம் என்றல் சொத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 180000 கோடி. இந்தமாதிரி நம்பரை நமக்கு நன்றாகவே தெரியும் அல்லவா? அம்மாடி இப்பவே கண்ணை கட்டுதே. ஆனால் தானிக்கி தீனி சர்கா போயிந்தி. எல்லத்துலேயும் நாங்கதான் முதல்

 • Moodan -

  nothing will happen in this country, they will go on digging, after a decade also will dig, and say lot of things are coming out,

 • SUBRAMANIAN.S - rajapalaym,இந்தியா

  நான் சொல்ல வந்தது 3 செய்திகள். 1 தினமலர் வாசகர்களுக்கு இனிய பொங்கல் வாழ்துக்கள். 2 நீதிபதிகள் பதவி ஏற்க்கும் போது ரகசியக்காப்பு உறுதி ஏற்றுக்கொண்டு எதையும் பேசிவிடலாமா. அல்லது இவர்கள் சுப்ரமணியசாமிகளா. புரியவில்லை. பதவி அப்படி.3 .மன்னார்குடி கும்பலை நகக்கண்ணில் ஊசி ஏத்தி உண்மையை வரவழைத்து பண்ணதை வாங்கி நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்துவதை விட்டு incometax என பூட்சாண்டி காட்டி காட்டி கேஸ் மூடிவிடுகிறார்கள். என்ன தேசம் .திருந்தாது திருத்தவும் விடமாட்டார்கள் என்ன செய்ய இந்தியாவில் பிறந்துவிட்டோம்.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  வருமானத்துறை , குட்கா ஊழல் பற்றி ரகசியமாக சி.எம் பழனிசாமிக்கு அனுப்பிய கடிதம் சசிகலா வீட்டில் இருந்ததாம்.. இது எப்படி நடக்கலாம்னும். அப்போ ஏன் இன்னும் பழனிச்சாமி சி.எம் ஆக உள்ளார்.. ?. இது அரசியல் சாசன படி தப்பு.. பழனிசாமியை உடனே டிஸ்மிஸ்பண்ண வேண்டும்.. இல்லை அரசாங்கம் சரியாய் செயல் படாது..

 • Bagyanathan - Dar Es Salaam,தான்சானியா

  மதிப்பிற்குரிய வாசகர்களே, தினமலரின் எண்ணம் புரிய வில்லையா? தற்பொழுது மிக முக்கியமாக கருதப்படும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டுக்களை மக்களின் பார்வை ல் இருந்து திசை திருப்பலாம் என்ற எண்ணம் மிக தெளிவாக தினமலருக்கு உள்ளது. அதனாலதான் அவளோ பெரிய செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிடாமல் முன்னரே அனைவரும் அறிந்த சசிகலா வின் செய்தியையே மீண்டும் மீண்டும் மக்கள் மன்றத்தில் பெரிதாக்க நினைக்கிறது. இது பிஜேபி - ன் ஜால்ரா என்பது தெரியவில்லையா? பத்திரிக்கை என்பது நடு நிலை வகிக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கை கூட இல்லாத தினமலர் மற்றவர்களை பற்றி குறை கூறி என்றே இருப்பது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். மிகவும் மனம் வருந்துகிறேன்.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  ஜெயா அண்ட் கோ என்று சொல்லுங்கள். A1 ஐ விட்டுறிங்களே

 • Ramesh Babu - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  தியாக தலைவி வெறும் 5000 கோடி மட்டும் தானா செய்தார்கள் வெட்கப்படவேண்டியது தமிழர்கள் ஒரு 10000 கோடி யாவது செய்யவேணவா அப்போதானே தியாக தலைவியை ஏற்றுக்கொள்ள முடியும்

 • Ramesh - Tambaram,இந்தியா

  முதலில் இந்திய சட்டங்களை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும். பழைய சட்டங்களில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அரசிலியல்வாதிகள் தாங்களே போய் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்வதற்கு அவர்கள் என்ன முட்டாளா? பாவம் சாதாரண மக்களாகிய நாமே.

 • Munnamalai - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஞானசூன்யங்களே மன்னார்குடி மாபியா கொள்ளையடித்த பணம் அத்தனையும் வெளிநாட்டில் இருக்கிறது. அங்கே போய் தேடுங்கள்.

 • C.Elumalai - Chennai,இந்தியா

  5000 கோடி தானா கண்டுபிடிச்சிங்க, மன்னார்குடி மாபியாவை மட்டமாக, நினைச்சிட்டிங்களே, அவங்க ஜெயா முகமூடிஅணிந்து ,தமிழ்நாட்டையே கொள்ளையடிச்சவங்களாச்சே. 80களில் சிடி வீடுகளில் வினியோகம் பண்ணி, காலத்தைஓட்டியவர்கள். போயஸ்கார்டனில் நுழைந்தபின் குடும்பமே அசூரவளர்ச்சி அடைந்தார்கள் ஜெ மீது பழிபோடுபவர்கள்,நினைத்து பாருங்கள், இன்றுவரை ஜெ சொத்துகளை ஆட்டைபோட்டு இருப்பது மாபியா கும்பல் தானே, ஹவா(அ)ல்வா முறையில் பணபரிமாற்றம் வெற்றி பெற்றது. ஜெக்கு இரும்புதிரையை போட்டு அடித்த கொள்ளைகள் ஏராளம். அடித்தை மக்களுக்கு வீசிவிட்டு,ஆட்சி பிடித்து வீசியதை,மொத்தமாக சுருட்டலாம் என்கிற நினைப்புதான்

 • K.Rajasekaran - chennai,இந்தியா

  தொடர்ந்து சசி குடும்பத்தை மட்டும் குறிவைப்பதன் நோக்கம் என்ன ? இந்தியாவில் மற்றவர்கள் எல்லாம் யோகிக்கியர்களா ?கர்நாடகாவில் எடியூரப்பா அடித்த கொள்ளை என்ன ஆச்சு ? பிஜேபி ஆட்சியில் கொள்ளை அடித்த ரெட்டி சகோதரர்கள் என்ன ஆனார்கள் ?2g வழக்கில் இருந்து கனிமொழி விடுவிக்க பட்டது எப்படி ?இதுபோன்ற பல பல கேள்விகள் மக்கள் மனதில் எழுகிறது.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  நீங்கள் கூறுவது உண்மையாக்க வேண்டுமானால், சட்டு புட்டுன்னு, சரியான, நேர்த்தியான, குறைபாடுகள் இல்லாத குற்றச்சாட்டுக்களின் பட்டியலை, கோர்ட்டுக்களில் சென்று சமர்ப்பித்து, தண்டனைகள் கொடுக்க செய்யுங்க, வருமான வரிதுறை ஐயா.

 • christ - chennai,இந்தியா

  அக்கா ,தோழி என சொல்லிகிட்டே ரெண்டும் தமிழ்நாட்டை சொரண்டி கூறு போட்டுருச்சுங்க. இப்படிப்பட்ட கும்பலுக்கே மக்கள் வாக்களித்ததே தங்களின் மீது தாங்களே மண்ணை வாரி போட்டதுக்கு சமம்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  தினமலர் மற்றும் வலைதள வாசகர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...உறங்கும் பெண்களை அதிகாலையிலே எழுந்து,கோலம் போடவைக்கும்,கோலாகலமான திருநாள்...மிரட்டி வரும் காளைகளை,விரட்டி அடக்கும் வீர திருநாள்...பழைய எண்ணக்களை அவிழ்த்து புதிய சிந்தனைகளை புகுத்தும்,புதுமையான திருநாள்...அனைத்து வாசக நபர்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் அனைவருக்கும் என் உற்சாகமான பொங்கல்,நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் . .

 • Gunasekar - hyderabad,இந்தியா

  இவைகள், ஜெயலலிதா உயிருடன் இருந்தால் வெளி வராது அல்லவா? நினைக்கும் போது, நம் சிஸ்டத்தின் மீது வெறுப்பு வருகிறது......

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பலே கில்லாடிகள். விட்டால், வருமான வரித்துறைக்கே, இருபது ரூபாய் நோட்டின் மேல் 5000 கோடி ரூபாய்க்கு டோக்கன் என்று எழுதி இன்று போய் நாளை வா என்று அனுப்பிவிடுவார்கள்.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  5000 கூடி தானே. எங்களுக்கு எதை பற்றியம் கவலை இல்லை.

 • ருத்ரா -

  என்ன கண்டு பிடித்து என்ன பயன். .மௌனப்பெண் சைகை யிலேயே காய் நகர்த்துவார் .இந்த மக்களும் கொள்ளை அடித்த கும்பலிடம் சிறிது பெற்று பூத்தூவி ஜெயிக்க வைப்பார்கள.

 • VOICE - CHENNAI,இந்தியா

  ஜேஜே என்னவோ உத்தமர் போலவும் சசிகலா தான் முழுவதும் கொள்ளையடித்தார் என்பது தவறு. ஜேஜே சொன்னதை சசிகலா செய்தார். ஜேஜே கொள்ளைக்கு உதவாமல் சசிகலா போயஸ் தோட்டம் இருந்து வெளிவந்துருக்கலாம் அனால் அதிகாரம் மரியாதையை பணம் பார்த்தபின்பு அது யாராக இருந்தாலும் வருவது சிரமம் அதற்கு தான் இன்று ஜெயிலில் இருக்கிறார். கொள்ளை அடிச்சது ஜேஜே அதற்கு நம்பிக்கையான ஒருவர் உதவி தேவைப்பட்டது அதனால் சசிகலாவை உபயோகப்படுத்திக் கொண்டார் . தமிழ்நாடு முழுவதும் கொள்ளை அடிச்ச பணத்தில் மக்கள் பங்கு வாங்கி கொண்டு வோட்டை போட்டுவிட்டு அவர் கொள்ளை அடித்தார் இவர் கொள்ளை அடித்தார் என்று கூக்குரல் வேறு ? கொள்ளை அடிக்க சொல்வது ஜேஜே, அம்மா ஆணைக்கு இணங்க அடித்தது மாபியா. அதில் பங்கு வாங்கி கொண்டவர் வோட்டை போட பணம் வாங்கிய தமிழக மக்கள் சசிகலா கொள்ளையடித்தார் ஜேஜே கொள்ளையடித்தார் என்று கூறுவது சிரிப்பாக உள்ளது. என்று ஜேஜே வீட்டில் வடநாட்டு ஆமை புகுந்ததோ, என்று மும்பையைச் சேர்ந்த தனியார் உளவுநிறுவனம் கொடுத்த தகவலை நம்பினாரோ அன்றய அவர் வீழ்ச்சி ஆரம்பம் ஆகி அப்போலோவில் முடிந்துவிட்டது . கடைசிவரை தன்னை முழுவதுமாக தான் வளர்ச்சிக்கு உபயோகபடுத்திவிட்டு எவ்வளவோ முறை கேட்டும் ஒரு பதவி கூட கொடுக்காமல் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய ஜேஜே மீது கொண்ட பாசம் தான் அன்று சமாதியில் அடித்த சத்தியம் ? என்பது சிலர் கருத்து. தன்னை முதன் முதலில் பாதுகாத்து அரசியலில் அரியணை ஏற்றி கூட பல சமயங்களில் நம்பிக்கையாக இருந்த ஒருவரை வைத்து கொண்டு அவரை சந்தேகப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம். பிடித்தால் வைத்திருக்கவேண்டும், சந்தேகப்பட்டால் அனுப்பிவிடனும். சந்தேகப்பட்டு அனுப்பாததால் குழப்பத்தை ஏற்படுத்தி ஆமை புகுந்து வீட்டை கெடுத்தது இல்லாமல் தமிழ்நாட்டை கெடுத்துவிட்டது.

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  நாங்கள் பகலில் திராவிடம் பேசுவோம். இரவில் டாஸ்மாக் வாசலில் தவம் கிடப்போம். 10 ஆயிரம் ரூபாய்க்கு எங்கள் தன்மானத்தை ஏற்கனவே மன்னார்குடிக்கு விற்றுவிட்டோம். இனி அவர்கள் 5000 கோடி என்ன லட்சம் கோடி சம்பாதித்தாலும் அடிமைகளான எங்களுக்கு என்ன கவலை.

 • Chandru - chennai,இந்தியா

  ram ram. One of my known persons was filing IT for years. She was working in private firm earning Rs.3000 pm. To get a refund of a small sum deducted by IFCI she filed. Refund did not come. After resigning from the job she stopped filing. It was an wounder that dept started sending letter asking for not filing. One side no refund other side no earnings but should continue filing papers. But for these people they could not track record for years. Edhu yentthunaiyavadhu Adhisayam. God only knows.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வரி ஏய்ப்பு என்பதை விட இவ்வளவு சொத்துக்களை இவர்கள் எப்படி சேர்த்தார்கள் என்று ஆராயவேண்டும்...

 • raja - Kanchipuram,இந்தியா

  கடைசியில் தான் ஆதாரம் இல்லை என தீர்ப்பு கூறிவிடுவார்களே?

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  1 லட்சம் கோடி கொள்ளை அடித்தாலும் கவலையில்லை ஆனால் ரேஷனில் கரும்பு சீனி வேட்டி சேலை கிடைத்தால் போதும் அவ்வளவு அறிவுத்திறன் படைத்தவர்களா நம் மக்கள் கூடுதலாக வோட்டுக்கு 10000 வரை கொடுத்தால் எவ்வளவு பெரிய கொள்ளை காரனுக்கும் வாக்களிப்பார்கள் தமிழ் நாட்டு மக்கள். அரசியல் வாதிகளுக்கு இப்பவும் அறிய வாய்ப்பு கொள்ளை எவ்வளவு அடித்தாலும் மக்களையும் கொஞ்சம் கவனித்தால் போதும் மக்கள் முதல் வராக தேர்தெடுப்பர்கள் நீதித்துறையும் மக்களும் விலை போகும் இடம் என்றால் அது தமிழகமே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கறுப்பை வெள்ளையாகியதற்கு ஆதாரம் கிடைத்தால் தான் சிறைத்தண்டனை எல்லாம் மற்றபடி இவர்கள் யாரும் அரசு பதவிகளில் இருந்திராததால் வெறும் அபராதம் மட்டுமே விதிக்கமுடியும் அதுதான் சட்டம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  //உடல்நிலை காரணமாக, விசாரணைக்கு வராத, திவாகரன் போன்றோர், பல தகவல்களை தரக்கூடும்// மூன்றுமாதமாக டேக்கா கொடுப்பவரை விட்டுவைத்தால் மற்ற கிரிமினல்களும் இதையே பின்பற்றுவார்களே

 • Anandan - chennai,இந்தியா

  இன்னைக்கும் ஆத்தா போல வருமான்னு ஈனஸ்வரத்தில் பாடும் முட்டாள்கள் நிறைந்த தேசம் இது. அந்த ஆத்தாவின் மந்தையில் இருந்த ஆடுகள்தான் இவை.

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  சவூதி அரேபியாவில் இளவரசர் என்ன செய்தார் ? நிமிஷத்தில் எல்லா பெரிய நிறுவனங்களின் முதலாளிகளையும் திரட்டி அவர்கள் பணத்தையெல்லாம் எழுதிக்கொடுக்க செய்தார் .நாம்? ஊடகங்கள் வழியாக பேசி பேசியே காலத்தை கடத்துவோம். கேட்டால் ஜன நாயகம். ஜன நாயகமா அல்லது பண நாயகமா? ஒரு லக்ஷம் சம்பாதிக்க நாம் எவ்வளவு உடல் வருத்தி வேலை ,செய்ய வேண்டியிருக்கிறது. ஒருவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தால் அவர் எப்படி சம்பாதித்தார் என்பதை கண்டறிய 18 வருடங்கள் ஆகிறது??? இதுவா ஜனநாயகம். இந்த நாட்டின் வளங்கள் இரும்பு தாது ,நிலக்கரி,பெட்ரோலியம், காஸ், வைரம், பாறைகள், மணல் ,தண்ணீர் ,கோவில்கள், மடாலயங்கள், அலை கற்றைகள் போன்றவைகள். இவைகள் இந்திய குடிமகன்கள் எல்லோரின் சொத்து. அரசியல் வாதிகள் விளையாடுவது இதை வைத்து தான். போதாதென்று மனிதனின் உயிர் குடிக்கும் லாஹிரி வஸ்துக்கள் . இவைகளை வைத்து பணம் சேமித்த பணம் இவர்களுடையது அல்ல.

 • siriyaar - avinashi,இந்தியா

  Since it is arround 5000 crore, so now sasi ans go has to meet arunji ans pay 5000 crore or more so that all cases will be closes peacefully same like 2G.

 • abc - Chennai,இந்தியா

  என்னமோ மன்னார்குடி குடும்பம் மட்டும் தான் வில்லன்கள் மாதிரியும் ஜெயா வுக்கு தெரியாமல் இவை அனைத்தும் நடந்த மாதிரியும் சொல்லுகிறீர்கள். அதிமுக ஆட்சி காலத்தில் அடித்த கொள்ளை இது. இத்தனை வருடம் என்ன செய்தது வருமான துறை? சசிகலா குடும்பத்தை வில்லன்களாக்கி விட்டு மற்ற எல்லாரும் நல்லவர்கள் மாதிரி நடிக்கிறார்கள்

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  இத்தனையும் சசியின் குறுக்குவழி பண சேமிப்பு என்பது தான் உண்மை இந்த வளம் தான் அவளை ஜெயாவையே எதிர்க்க துணிவே வந்துருக்கு , அதனால் போயஸ் வீடு மற்றும் இதர ஜெயாவின் சொத்துக்களுக்காகவே தங்கையா வேஷம் போட்டுருக்கா, ஆயுளுக்கும் சிறையே கதி தான் படிப்பும் இல்லே ஆனால் இந்த பொம்பளே கணக்குலே எவ்ளோ கெட்டி பாத்தியாலே பிள்ளையாக் குட்டியா மக்சிமம் பெரிய பணக்காராலை எல்லாம் மேற்கத்திய அடிமாட்டு விலைக்கு வாங்கிருக்கப்போல சத்தியம் ஜெயிக்கும் என்று பார்ப்போம் இதெல்லாம் பாக்கறச்ச ஜெயம்மாக்கு எப்படியோ இவளின் திப்பிசம் புரியவே தான் அடிச்சு வெரட்டினாங்க போல இருக்கு ஆனால் ஜென்மத்து சானியா மீண்டும் வந்தாள் கொன்றாள் எப்படியும் மாட்டிண்டுட்டோம் CID நொண்டி நிறுவி வாயிலேந்து எல்லாம் கரைந்துருவான் அதான மெளன விரதமாம் மன்னார்குடியே RK நஃர் சம்ஹத்துகள் அனுப்பிட்டுதுங்க ஆனால் அவனும் சிக்குவான் யாருங்க அதிமுக திமுக லே ஏவாளும் யோக்கியமே இல்லே தீர்ப்பு வரும் வரை பேதி கழிஞ்சுண்டுருன்னா ராசாவும் கணிமொழியும் விடுதலைன்னது கனிமொழி வாய் எப்படி என்னவெல்லாம் பேசுது திஹார் பயம் வுட்டுப்போச்சு .

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  விஜயபாஸ்கர் சொந்தமான கம்பெனி இப்பவும் அப்படி தான் பண்ணிட்டு இருக்காங்க

 • Rajan - chennai,இந்தியா

  ஆமாம் இப்படி தான் சொல்லி வழக்கை போடுவீங்க...6 வருடங்களில் கானல் நீராக போய்விடும் சாட்சிகள்...இந்திய சட்டங்கள் சாதாரண சம்பளத்தின் போது வரிக்கட்டும் (TDS) ஏழை நடுத்தர சாமான்யனுக்குத்தான்.... போங்க பா உங்க நீதிமான்களுக்கும்., சட்டங்களும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  எல்லாம் மக்களின் சொத்து. இந்த கும்பலை, ஒவ்வொருக்கோடிக்கும் ஒருவருடம் என்று ஜெயில் போடவேண்டும்.. இவர்கள் உத்தமர்கள் போன்று, மற்றவனை ஊழல் கட்சி, திருட்டுக் கும்பல், அது, இது என்று கூறிக்கொண்டு இவர்கள் குவித்ததுதான் உண்மை.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  5000 கோடி என்ன, 10,000 கோடியே இருந்தால் கூட என்ன செய்து கிழிக்க போகிறது இந்த வெறுமான துறை? .. "அதிர்ச்சி, பகீர்", ன்னு கொட்டை எழுத்தில் தலைப்பும், மோசடிகளுக்கு அரசியல் ஆதாயமும் தான் கடைசியில் தேறப்போகிறது.. இதே போல நடந்த மற்ற "பகீர்" களில் ஒரு ....யிராவது ஆச்சா? ஒன்றும் இல்லை. வெந்நீரும், எடுப்பும் இன்று தலைமையில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  எங்களுக்கு இதெல்லாம் அதிர்ச்சியே இல்லை. வோட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய், குவாட்டர், பிரியாணி கொடுத்தால் குடித்துவிட்டு மன்னார்குடிக்கு காலத்துக்கும் நாங்கள் அடிமையாக இருப்போம்.

 • Jay - SFO,யூ.எஸ்.ஏ

  ஏன்பா நேரத்தை வீணாக்கிட்டு... இவங்க எல்லாரும் நல்லவங்க, நாம தான் மங்குங்க... எப்பா போலீஸ்கார், அங்க எவனோ அப்பாவி இருப்பான், அவனை போட்டு குமுறுங்க, பிச்சைக்காரன் கிட்ட சட்டம் பேசுங்க, இந்த நல்லவங்கள ஏன்பா தொந்தரவு பண்ணிக்கிட்டு... மோடி, நல்லா வருவீங்க. எதையாவது பண்ணித்தொலைங்க, இவ கெட்டவ அப்டினாவது முடி, இல்ல நல்லவள்னு சொல்லி விட்டு தொலை. எங்களை எப்பப்பார்த்தாலும் எதோ நடக்குமோனு எதிர்பார்க்கவெச்சிட்டு, கடைசியில பேப்பர் காசு தான் தண்டம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement