Advertisement

'சாதாரண கைதியா நான்?' நீதிபதியிடம் லாலு புகார்

ராஞ்சி : மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், தன்னை, சாதாரண கைதியை போல, சிறை அதிகாரிகள் நடத்துவதாக, சி.பி.ஐ., நீதிபதியிடம் புகார் கூறி உள்ளார்.

மூன்றரை ஆண்டு:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத்
யாதவ் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்கை, ஜார்க்கண்ட், சி.பி.ஐ., நீதிமன்றம் விசாரிக்கிறது. இம்மாத துவக்கத்தில், லாலுவுக்கு, மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஷிவ்பால் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, ராஞ்சி மத்திய சிறையில், லாலு அடைக்கப்பட்டார்.

சமீபத்தில், மற்றொரு வழக்கிற்காக, சி.பி.ஐ., நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட லாலு, நீதிபதி, ஷிவ்பால் சிங்குடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

திறந்தவெளி சிறை:அப்போது, அரசியல் கைதிகளுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவது உண்டு. ஆனால், தன்னை சாதாரண கைதியை போல நடத்துவதாகவும், கட்சி பிரமுகர்களை சந்திக்க அனுமதிப்பதில்லை என்றும் கூறினார்.


அதற்கு, திறந்தவெளி சிறைக்கு செல்லத் தயாரா? என, நீதிபதி கேட்டதற்கு, லாலு மறுத்துவிட்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (26)

 • rajan - kerala,இந்தியா

  ஆம் சாதாரண கைதி அல்ல நீங்கள். முன்னாள் முதலமைச்சர் இன்றய கைதி என்றால் மிகையாகாது.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  He is not a political prisoner.

 • NARAYANAN.V - coimbatore,இந்தியா

  அவரது மனது சாந்தம் பெறட்டும்.அவரது அங்கலாய்ப்பு தீரட்டும்.

 • narayanan iyer - chennai,இந்தியா

  இந்த நீதியை கேட்டு சரி என்று சொல்பவர்கள் லாலுவுக்கு அளித்த தீர்ப்பை சரி என்று சொல்லும் அறிவாளிகள் ஏன் 2G கேசின் தீர்ப்பை சரி என்று ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்களோ?

 • s t rajan - chennai,இந்தியா

  யோவ் லல்லு ரொம்ப கொள்ளையடிச்சா வீஐபி கொள்ளையன்னு உனக்கு ஸ்பெஷல் மரியாதையா..... தீவனக் கொள்ளை தீவட்டி உன்னை மாட்டைக் கழுவி சாணி பொறுக்கித் தொழுவத்தை கூட்டிப் பெருக்கி அங்கேயே தங்கி உத்திரவிடணும்.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இவனை முன்னால் நிறுத்தி இவன் குடும்பமே கொள்ளையடித்தது ... இவன் குடும்பத்தில் எல்லோரையும் ஜெயிலில் போடவேண்டும்...

 • B.Indira - thane,இந்தியா

  ஒரு முறை பீகார் ஜெயிலுக்கு போன போது வெளியில் நின்றிருந்த போலீஸ் காரர்கள் சல்யூட் அடித்து வரவேற்றனர் .இதுபீகார் இல்லை.இனி பிகாராகஇருந்தாலும்கஷ்டம் தான் .நேற்றுகல்வீசி தாக்கியதால் நிதிஷ் ரொம்ப கோபமாக இருக்கிறார்

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  இது சாதாரண கைதியா. இல்லை இல்லை. பெரிய கைதி

 • மைதிலி -

  சாதாரண கைதியா ? யார் சொன்னது. கால்நடைகள் கூட ஒத்துக் கொள்ளாது. இந்த வருடம் மாடுகள் மகிழ்வுடன் மாட்டுப் பொங்கல் கொண்டாடட்டும். புலம்பாமல் பழசை அசை போடவும்.

 • ARUN.POINT.BLANK -

  nee saadhaarana kaidhi illa, kape maari kaidhi 😂

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Saathaarana kaithi illai keduketta oozhal kaithi sothukalaiyum parimuthal seyyavum

 • kundalakesi - VANCOUVER,கனடா

  மாடு துன்னர வைக்கோல், போட்ட பொதி பத்து , பத்து பொதி வைக்கோலுக்கு, கணக்கு எழுது கோடி, கோடி துன்ன வயிறு , குடும்பத்தோட குஷிதான், ஆட்டைய போட்ட பணமெல்லாம், அய்யா மன்னிச்சு உட்டாரு, மூணரை வருஷம் ஓடிரும், பீஹாரு பாரு ஜோரு.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பல நூறு கோடிகளுக்கு ஈடாக ஒருவர் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இராஜபோகமாக இருந்து அந்தப்பணத்துடன் வாழ முடியும் என்றால் இவர் என்ன இன்னும் பலர் சிறைக்கு வர முன்வருவார்கள்... அடித்த பணத்துக்கு ஈடாக சொத்துக்களை பறிமுதல் செய்து இவரை வாழ்நாள் முழுவதும் லாயத்தில் கட்டவேண்டும்...

  • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

   லல்லு பிரசாத் யாதவ் தெற்கத்தி திருடர்கள் அளவுக்கு சம்பாதிக்கவில்லை. கொஞ்சம் கம்மி தான். இந்திய அரசியலில் காசு அல்லது பரிசுப்பொருள் வாங்கி ஓட்டளிக்கும் சில்லறைத்தனமான வாக்காளர்கள் சுமார் இருபது சதவீதம் உள்ளனர். அந்த கும்பல் இருக்கும் வரை இந்த நாட்டில் இப்படி பட்ட அரசியல்வாதிகள் வளர்வதை தடுக்க முடியாது. பணமோ பொருளோ கொடுத்தாலும் வாக்காளர் நிச்சயம் வாங்கமாட்டார் என்ற நிலை வந்தால் தான் முன்னேற்றம் ஏற்படும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கொம்புள்ள கைதி... ஆகவே கால்நடை போல கட்டிப்போட்டு வைக்கவேண்டும்... இல்லை என்றால் வேண்டாத வேலை மட்டுமே செய்யும்...

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  ஆமாங்க இவரு சொல்றது உண்மைதான்? ஊழல் கைதி? திருட்டு கைதி? கோடிகணக்குல கொள்ளை இங்க்ல அடிச்சதுக்கு காலம் போன காலத்துல கோலம் போட்ட மாதிரி சும்மனாச்சிக்கும் ஒரு தண்டனை?சரி தீருடுன பணத்தை எல்லாம் மீட்டாச்சா இல்ல வெறும் கண் துடைப்பு நாடகம்தானா? இங்க விட அங்கெல்லாம் ரொம்ப ச்சீப்பு மாதிரிதான் தெரியுது?

 • Rajasekar Venkatesan - Singapore,சிங்கப்பூர்

  நிச்சயமாக இவர் சாதாரண திருடன் இல்லை. எல்லா திருட்டுக்கும் முன்மாதிரி. ஹை டெக் திருடன். இவனுக்கு குடுக்கும் தண்டனை அனைவரையும் நடுங்க வைக்க வேண்டும். இப்போது கொடுத்திருக்கும் தண்டனை மிக மிக குறைவு.

  • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

   பெரம்பலூர் வருவாய்த்துறை ஊழியர் 500 ரூபாய் லஞ்சம் வாங்கியவருக்கு நீதிமன்றம் ஏழு வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. அதே சமயம் கோடிக் கணக்கில் ஊழல் செய்த லல்லூ வுக்கு 3 .5 வருடம் தான். இது தான் இந்திய சட்டங்களில் உள்ள ஓட்டை .

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  ஆமாம். இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடுவழியில் காரிலிருந்து இறங்கி சாலை ஓர மரத்தின் பின் ஏதோ செய்ததாக ஊடகங்கள்??? இதே திறந்த வெளி சிறையில் செய்ய மாட்டாரா? அதனால் மற்ற கைதிகள் கஷ்டப்பட மாட்டார்களா? .

 • devaraju -

  then you what?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மக்கள் பணத்தை கொள்ளையோ கொள்ளை அடித்தவருக்கு இது பத்தாது.அவரை அந்தமான் அனுப்பவேண்டும்.

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  குளிர் கொல்லுது , இந்த நேரத்தில் திறந்த வெளி சிறையா?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இது சாதாரண கைதியா .. எப்பேர்ப்பட்ட ஆளு, பார்த்தா தெரியல?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   மலை முழுங்கியாச்சே..

 • Agrigators - Chennai,இந்தியா

  அவர் சாதாரண கைதியில்லை ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கபட்ட கைதி என்பதை நீதிபதி அறியமாட்டாரா? என்ன கேள்வி இது?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தில்லாலங்கடி கைதி. மக்கள் நம்பிக்கையை திருடிய கொள்ளைக்காரன். நீங்க சாதாரண கைதியே இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement