Advertisement

முகவரி இல்லா பாஸ்போர்ட்; மத்திய அரசு திட்டம்

புதுடில்லி : பாஸ்போர்ட்டில், இருப்பிட விபரங்களை அச்சிடுவதை நிறுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதனால், இனி பாஸ்போர்ட்டை இருப்பிட அடையாளத்துக்காக பயன்படுத்த முடியாது.


பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில், புகைப்படம் மற்றும் தனிநபர் விபரங்கள் இடம் பெறுகின்றன. கடைசி பக்கத்தில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் இருப்பிட முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறுகின்றன.


மாற்றம்:
கடந்த, 2012 முதல், அனைத்து பாஸ்போர்ட்களிலும், 'பார் கோடு' இடம் பெறுகிறது. அதில், அனைத்து விபரங்களும் பதிவாகின்றன. அதனால், பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் இருக்கும் இருப்பிட விலாசம் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இனி வழங்கப்பட உள்ள பாஸ்போர்ட்களில் இருந்து, இந்த மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஆரஞ்ச் நிறம்:
தற்போது, பாஸ்போர்ட் நீல நிறத்தில் உள்ளது. இ.சி.ஆர்., எனப்படும், குடியுரிமை சோதனை தேவை உள்ளவர்களுக்கு, ஆரஞ்ச் நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்கள், புதுப்பிக்கப்படும் வரை செல்லும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  அட பச்சையில் போடுங்க. போலி மத சார்பின்மைவாதிகள் சந்தோஷப்படுவார்கள்.

 • Shake-sphere - India,இந்தியா

  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிரிமாவோ பண்டார நாயகே ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரஞ்சு பாஸ்போர்ட் தான் வழங்கப்பட்டது. இப்போதும் அது இலங்கை அகதிகளிடம் இருக்கிறது. அது வழங்கப்பட்ட பொழுது நாட்டில் பி ஜே பி கட்சியே கிடையாது. தற்போது பாஸ்போர்ட்டை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவனெல்லாம் ஆரஞ்சை காவி என கூவுகிறான். இதன் மூலம் இலங்கை அகதிகளையும் கேவலப்படுத்துவதோடல்லாமல் சமூக விரோதி ஆகி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கிறான்.

 • spr - chennai,இந்தியா

  மத்திய பாஜக அரசு பல முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து ஆதாரை கட்டாயமாக்குகிறது போலும்

 • suresh - covai,இந்தியா

  ஆரஞ்சு நிறமா? காவி ன்னு சொல்ல தைரியமில்லை'. இதுல பி.ஜே.பிக்கு ஜால்ரா வேற ..

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நைனா நாம உலக பேமஸ் மத்திய அரசு ரூம்போட்டு யோசிப்பாங்களோ?

 • Sami - Tirupur,இந்தியா

  Only foolish rules India. Better to run away from this place. BJP 1000 percent destroy the nation in the name of Hindu. Hindu terrorism begun in India. It is very bad thing by BJP the only govt is never ever think like human.

 • Mohan Kumar - chennai,இந்தியா

  Of late, only idiotic and worthless or useless changes only are being done

 • Power Punch - nagarkoil,இந்தியா

  காவிதான் ஆரஞ்சு நிறம்..

 • Elavarasu -

  Orange இல்ல.. அது காவி..

 • Kumar - Singapore,சிங்கப்பூர்

  அதென்ன ஆரஞ்சு? காவின்னு சொல்ல தைரியம் இல்லியா? நடத்துங்க

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  வேலையின் காரணமாக அடிக்கடி இடம் மாறுபவர்களுக்கு நல்ல செய்தி.

 • Jana - Chennai,இந்தியா

  International standard.. No address is visible its orange or saffron color?

 • devaraju -

  good

 • Robinson - Riyadh,சவுதி அரேபியா

  அதென்ன ஆரஞ்சு நிறம்? காவி நிறம்தானே?

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  I do not know whether there are countries which use two different colours on its Passports for its citizens. It can give rise to doubts, chaos , and differentiation of treatment in other country airports. This ECR clearance is a local indian requirement, which should not end up in giving such passport holders a secondary citizen treatment. The colour should be one for the whole country and it can adopt some other method to identify ECR requirement of the passport holders such as the same bar code can do this work in addition to providing the res address. Again, this idea of not entering the address will land NRIs in trouble, as they will not have any proof for their addresses in India. Theydo not hold Aadhar card also. So the ministry should not entertain this harmful change in Passport rules.

 • muttam Chinnapathas - Chennai,இந்தியா

  First of all I am not sure what is use of removing home address from passport ...அது என்ன ஆரஞ்சு நிறம்... காவி நிறத்துக்கு மாற்றபடம்னு சொல்லுங்க பாஸ்... அதுக்கு ஒரு நாலு பேர் எதிர்ப்பு தெரிவிக்கனும் ...அதை வைத்து ஒரு பத்து பேரை உணர்வச்சிபடவக்கனும்... இது மாதிரி எதாவது பண்ணிக்கிட்டே இருக்கனும் அப்பதான் எவனுக்கும் நாட்டு பிரச்னை பற்றி எவனையும் யோசிக்கவிடவே கூடாது... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவிங்க

 • RAJ - dammam,சவுதி அரேபியா

  instead of changing colors and silly things, do something about rivers to connect.enough is enough for this kind of bullshit things. Think about unemployment, do something for villagers, farmers, make Clean India. everyone knows 50 years a farmer become a farmer and struggling for daily needs, but in 5 years a MLA become billionaire. So do something, colour chafing is not going to make any changes in a poor man's life.

 • andaver -

  ஆரஞ்சு அல்லது காவி யா??

 • Agrigators - Chennai,இந்தியா

  அருமை அருமை வாழ்க பாரதம்

 • andaver -

  ஆரஞ்சு அல்லது காவி யா

 • vk cbe - coimbatore,இந்தியா

  இதுலயுமா காவி நிறம்..?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement