Advertisement

'டவுட்' தனபாலு

சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன்: லோக்சபாவில், நாங்கள், தி.மு.க., - எம்.பி.,க்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். ம.தி.மு.க., தலைவரை பார்த்தால் பேசுவோம்; அதே நாகரிகத்தில் வளர்ந்தோம்.


டவுட் தனபாலு: 'எதிர்க்கட்சியினரை பார்த்து, சிரித்துக் கொண்டனர்'னு, பழி போட்டு பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவியை உங்க சித்தி சசிகலா பறித்தாரே... அப்போது, இந்த நாகரிகத்தை எடுத்துச் சொல்லி இருக்க வேண்டியதுதானே... உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம்கறது சரியா என்பதுதான், என்னோட, 'டவுட்!'


------


புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்கள், உண்மையான ஏழைகளுக்கு சென்றடையவில்லை.


டவுட் தனபாலு: நீங்க தமிழக அரசை குற்றஞ்சாட்டுறீங்களா... இல்லை, தமிழக கவர்னருக்கு இதெல்லாம் தெரியாது... அதனாலதான், அதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்காருன்னு
விமர்சித்து, உசுப்பிவிடப் பார்க்குறீங்களா என்ற, 'டவுட்' வருதே...!


---------


பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பேராசிரியர் தீரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


டவுட் தனபாலு: 'கட்சியை தினகரனும், ஆட்சியை பழனிசாமியும் பார்த்துக் கொள்ளணும்'னு சொன்னதற்காக, கட்சியை விட்டுத் துாக்கினாங்களா... இல்லை, 'பா.ஜ.,வை வளர்க்கவே கவர்னர் ஆய்வு செய்யுறாரு; பெரும்பான்மையை நிரூபிக்க, தமிழக அரசு எத்தகைய நடவடிக்கையையும் கையாளும்'னு பேசி இருந்தாரே, அதற்காக இந்த நடவடிக்கையா... இந்த, 'டவுட்'டை, அ.தி.மு.க., தலைமை விளக்குமா...!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement