Advertisement

ஜனநாயகத்துக்கு ஆபத்து: ராகுல்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.


ஜனநாயகத்திற்கு ஆபத்து என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும். நீதிபதி லோயா விவகாரத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். நீதிபதி லோயா இறப்பு குறித்து உயர்மட்ட அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • Anand - chennai,இந்தியா

  நீதிபதிகள் தங்களது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள், இதிலென்ன ஜனநாயகம் ஆபத்து? ஜனநாயக முறைப்படி நீ உனது கட்சிக்கு தலைவன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டாயா? அல்லது உன்னுடைய அறிவு, தொண்டு, திறமை, ஆகியவற்றின் அடிப்படையில் தலைவன் பதவி கிடைத்ததா? எந்த பதவிக்கும் தகுதியில்லாத உன்னை வெளிநாட்டு அடிமை மோகம் கொண்ட சிலரால் பின்வாசல் வழியாக தலைவன் பதவிக்கு வந்த நீ ஜனநாயம் பேசுகிறாய். என்ன செய்வது நம் நாட்டின் தலைவிதி.

 • Abubacker - tirunelveli,இந்தியா

  எதிரிகளை வீரத்துடன் எதிர் எதிராக சந்திக்கலாம், ஆனால் தேசத்தோராகிகள் ஒன்றாக இருந்து எல்லோரையும் கொன்றுவிடுவார்கள்.....

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  உங்க பாட்டிய விட இப்போ மோசம் இல்லை .

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இவுரு சொல்றது ரைட்டு நைனா..தெனம் வர நியூசா படிச்சா ஒட்டு மொத்த இந்தியாவே மோசடிலதா இருக்குனு நம்பத்தா தோணுது...மாத்தம்னு ஏமாத்தமாயிருச்சே நைனா..மொத்தத்துக்கு நட்டம் நைனா...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நீதித்துறையை அரசியல்மயமாக்கியது ராகுலின் குடும்பம்தான் மாநில மந்திரியாக இருந்த கிருஷ்ணய்யரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்கியபோது தவறான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டது பிறகு திமுக மாவட்ட செயலாளரையே ஐகோர்ட் நீதிபதியாக்கி அக்கட்சிக்கு உதவியது மோசம் அதனை விட மோசம் ஊழலால் சுப்ரீம்கோர்ட்டில் கண்டனத்துக்குள்ளான ராமசாமியை விலகும் தீர்மானத்தை பார்லிமென்டில் தோற்கடித்தது பல ஊழல் நீதிபதிகளுக்கு ஊக்கமளித்ததே அவரதுமாமனார் வீராசாமி நீதித்துறையையே கலங்கடிக்கும் அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் வந்தும் முப்பது வருடமாக அவரைக் காப்பாற்றியது நனறிகடனாக மகன் சஞ்சய்க்கு எம் எல் ஏ சீட் கொடுத்தது .மேலும் மூன்று சீனியர் நீதிபதிகளை ஒதுக்கிவிட்டு ஜூனியரான எ என் ரேக்கு பதவிஉயர்வு கொடுத்து தலைசாமி நீதிப்பதியாக்கி பலனை அனுபவித்தது இதே தீபக் மிஸ்ராவின் மாமா முன்னாள் ஸுப்ரீம் கோர்ட் நீதிபதி ங்கநாத் மிஸ்ராவுக்கு எம்பி பதவி கமிஷன்களில் தலைவர் பதவி என அலங்கரித்தது என அடுக்கிக்கொண்டே போகலாம் ஆகமொத்தம் நீதித்துறையையே சீரழித்துவிட்டு இப்போது ஆலோசனை கூறுவது ராகுலின் குடும்ப நாகரீகமே

 • Srinivasa Krishnan - madurai,இந்தியா

  . 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சொல்லிய மறுநாள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடப்பதன் பின்னணி என்ன ?

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  நீதிமன்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஏதாவது நடக்கிறதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளது ரிபப்ளிக் டிவி... 1984 சீக்கிய படுகொலை பற்றி விசாரணைக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்ட பிறகு தான் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது... உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி திரு தீபக் மிஸ்ரா 1, 1984 சீக்கியர் மரணங்களை திரும்ப விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், 2, ராம் ஜென்ம பூமி வழக்கை கையாளுகிறார். 3, நரேந்திர மோடி அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். இரண்டுவாரங்களுக்கு முன்னால் இந்த நாலு நீதிபதிகளையும் கம்யூனிஸ்ட் டி. ராஜா சந்திக்க அவசியம் என்ன ? எதற்காக கம்யூனிஸ்ட் டி. ராஜாவை பேட்டியளிக்கும் முன்பு நீதிபதிகளை சந்தித்க வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்பு எதற்காக கம்யூனிஸ்ட் டி ராஜவை நீதிபதி சந்தித்து பேச வேண்டும் என்று அர்னாப் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டி. ராஜா வெளியே சென்று விட்டது ஏன்? ராபர்ட் வதேரா வழக்கு வழக்கறிஞர் துளசி எதற்காக இந்த நீதிபதிகள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பற்பல சந்தேகங்களை ரிபப்ளிக் டிவி கேட்டு வருகிறது... கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லோயா அறையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நீதிபதி லோயா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, ஏ.எம்.கன்வீல்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. // தீபக் மிஸ்ரா ஏற்றவுடன் அடுத்த நாளே அவர் மீது குற்றச்சாட்டா ? இப்போ புரியுதா ஏன் இந்த நாலு ஜட்ஜூகளின் டிராமாவும் அதன் பின்புலமும்.. இவர்கள் பேசுவதை பார்த்தால் மத்திய அரசை விமர்சனம் செய்ய வருவது போல் உள்ளது இதன் பின்னால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இருக்கிறது என்பது தெளிவாகிறது இந்த காங்கிரஸ் பின்னால் சீனா, பாகிஸ்தான் என்று எத்தனை நாடுகள் உள்ளன ?

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தது உன்னோட பாட்டி இந்திரா ஆட்சியிலதான் ... அதையே தாண்டி வந்துட்டோம் ... பப்பு ...

 • அப்பு -

  பப்பு...எமர்ஜென்சி கொண்டுவந்த ஒங்க பாட்டிய விட இது இண்ணும் மோசமில்லே...ஜனநாயகம் அப்பிடி ஒண்ணும் பாழாகிடாது.

 • APJ AK - AP,இந்தியா

  1) அதிக சத்ததுடன் தும்மினால் எக்ஸ்கூஸ்மீ (Excuse Me) சொல்லறோம் 2) முன் பின் அறிமுக இல்லாத நபர் சாவு பற்றி கேட்க நேரிட்டால், "ஐயோ சாரி" (Oh Sorry) சொல்லறோம் 3) என்னதான் நாம் வயதில் பெரியவராக இருந்தாலும், சார் மே இ கம் இன்? கேட்டு செல்கின்றோம் 4) இந்த அளவுக்கு அடுத்தவர் மனம் நோகாமல் பார்த்து பேசுவது, நடந்து கொள்வது தான் பண்பாடு 5) இந்துக்கள் பெரும்பான்மை உள்ள இந்து நாட்டில், இந்துக்களின் மிக உயர்ந்த கடவுள் ஆண்டாளை ஒரு தாசி என்று எப்படி சொல்ல முடிந்தது? 6) இந்துக்கள் மனம் மிக பெரிய காயத்தில்….. இனிமேல் மன்னிப்பு கேட்டால் என்ன? கேட்கவிட்டால் என்ன?

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  பப்புவுக்கு கிடைத்த அருமையான சான்ஸ் பண நீக்கம் அப்போவே மக்களிடையே பெரிய அளவில் எடுத்து சென்றிருந்தால் இன்றைக்கு பிஜேபிக்கு இந்த தைரியம் வந்திருக்காது தேர்தல் காள நாயகனாக மற்றும் சுற்றி வர நினைக்கும் உமக்கு வெற்றி என்பது ரொம்ப தூரம் மக்கள் பிரச்சினையை தேர்தல் அல்லாத காலங்களிலும் சரியான பாதையில் கொன்று சென்றால் சரியான தலைவர் என்று ஏற்று கொள்ளலாம் அதற்கு வெகு தூரத்தில் காங்கிரஸ் இருப்பது நன்றாக தெரிகிறது 100 fdi அரசு கொண்டு வருகிறது அதனை எதிர்க்க துப்பு கிடையாது சிலிண்டர் விலை 800 ஐ தாண்டிவிட்டது ஒரு போராட்டம் கூட அரசுக்கு எதிராக காங்கிரெஸ்ஸால் முன்னெடுக்க முடியவில்லை , முதுகு எழும்பு இல்லாத ஒரு எதிர்க்கட்சியாக மேலும் எதிர்க்கட்சியாக காங்கிரசுக்கு எப்படி செயல் பட வேண்டும் என்றே தெரிய வில்லை என்றே சொல்லலாம் , இந்த நிலையில் தொடர்ந்தாள் காங்கிரஸுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியை தான் மக்கள் கொண்டு வர வேண்டும் ஆனால் கண்ணனுக்கு எட்டிய தூரத்தில் அது புலப்படவே இல்லை இதுதான் இன்றைய இந்திய

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. செத்து போய்கொண்டு இருக்கிறது. ஆனால் யாரும் அதற்காக கவலை படுவதாக தெரியவில்லை. இப்போ உண்மை வெளிப்பட்டுவிட்டது. மீடியா வின் கழுத்தை நெரித்து விட்டது இந்த அரசாங்கம்.. மக்களுக்கு எந்த உண்மையும் தெரியாமல் மறைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. எப்போ விடிவு காலம் பிறக்குமோ என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். கையை கொண்டு சூரியனையே மறைக்க நினைக்கிறார்கள் .

 • Prakash JP - Chennai,இந்தியா

  உச்ச நீதிமன்ற குழப்பங்களும் பாஜகவும் உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள், இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இது போல் ஒரு நிகழ்வு நடந்ததில்லை. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை கூறி உள்ளனர். அதில் முக்கியமானது, இறந்து போன நீதிபதி லோயா பற்றியது. பாஜகவின் தலைவர் அமித் ஷா சம்மந்தபட்ட ஷொராபுதின் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தான் லோயா அவர்கள். அவரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மர்ம மரணத்தை விசாரிக்க உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி, அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் நீதிபதி அருண் மிஸ்ரா என்பவர் முன்னிலையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வைக்கபடும் மற்றொறு குற்ற சாட்டு, இது போல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகள் முன்னிலையில் அந்த வழக்கை அனுப்பி, அரசுக்கு அனுகூலம் செய்கிறார் என்பதாகும். இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் மாண்புகளையும் திட்டமிட்டு சிதைத்து வருகிறது பாஜக.

 • rajan. - kerala,இந்தியா

  பப்பு உண்மையான ஜனநாயக அச்சுறுத்தல் என்பது உங்க காஸ்மீர் அப்துல்லாக்கள், அமீத் அன்சாரி, குலாம்நபி ஆகியவர்களால் தான். நீதிபதிகள் பிரச்சினை தீர்வு காண கூடியது தான். நல்லா மாத்தி யோசிக்கணும் பப்பு. பினாத்த கூடாது.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பொதுவாக, தன்னலமின்றி, தன் தேசத்தை, தன் மனதில் இருத்தி, கடமைகள் ஆற்றும் எவரும், தாம் மேற்க்கொண்டு, அதாவது, மனதார ஏற்றுக்கொண்டு, செய்யும், எந்த ஒரு கடமையிலும், பேதத்தை பார்க்க மாட்டார்கள் எனலாம். உதாரணம், தேச தந்தை மகாத்மா காந்திஜியை கூறலாம். எனவே இக்கருத்து, புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

 • KanagaSundarrajanK -

  பப்பு வந்தாலே கலவரம் தான். வாயை திறந்தாலே கலகமூட்டும் வார்த்தைகள் தான்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Yes yes in rajyashaba congress loosing strength in judicery also your people going out. That measlns danger democracy. Modi made a same side goal, but now BJP waiting for your selfside goal, now it is confirming that it is an congress high level drama.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நீதிபதி லோயா மரண மர்மம் நாட்டை உலுக்கும்..." சதா சதா சிவா " போல "வீவா" குடிப்பவர் அல்ல அந்த "லோயா"... பாவம் ....நீதிபதியையே கொல்ல துணிந்தவர்கள் மக்களை காவு வாங்க மாட்டார்களா?... மாட்டுக்கறி தின்றால் குற்றம்... பணம் வைத்திருந்தால் முடக்கு... ATM இல் அலையவிட்டு அவனை நிர்மூலமாக்கு...சிறு தொழில் பண்ணுகிறவனை வருமானவரித்துறை கொண்டு நசுக்கு... பெரும் முதலாளிகளை காப்பாற்று.... பொழுதனைக்கும் மதம் பற்றியே விவாதி... முன்னேற்றம் , வேலை வாய்ப்பு பற்றி மூச்... வரியை கொட்டடித்து கொண்டாடு... சின்ன கொள்ளை அடித்தவர்கள் வேண்டத்தகாதவர்கள் என்றால் சிறைவாசம்... பெரிய கொள்ளை அடித்தவர்கள், வளைந்து கொடுத்தால், வெளியில் உல்லாசம்.. விவசாயி கடனை ரத்து பண்ணச்சொன்னால், அவன் நாட்டுக்காக வாழ்க்கையையே தியாகம் பண்ணவேண்டும்... ஆனால் திவால் ஆகாமல் இருக்க கார்பரேட்களுக்கு பல லட்சம் கோடி தள்ளுபடி... இந்தியா முன்னேறிவிட்டது என்று பித்தலாட்டம்...ஆனால் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் எமலோகம்... முரண்பாடுகளின் மொத்த உருவம் ... நீதியரசர்கள் வெகுண்டு எழுந்துவிட்டார்கள்... மக்கள் ???

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement