Advertisement

டீ கடை பெஞ்ச்

ஆந்திராவுக்கு ஓடும் தமிழக கான்ட்ராக்டர்கள்!

''தோல்விக்கான காரணங்களை தெரிஞ்சு, அறிவுரை குடுத்துட்டு போயிருக்காருங்க...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.


''யாரைச் சொல்லுதீரு வே...'' என்றார் அண்ணாச்சி.


''ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல, பா.ஜ., வேட்பாளர், 'நோட்டா'வை விட குறைஞ்ச ஓட்டுகள் வாங்குனாரு... இதை, குஜராத் சுயேச்சை, எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி, 'டுவிட்டர்'ல கிண்டல் அடிச்சிருந்தாருங்க... ''இதைப் பார்த்து, பா.ஜ., டில்லி மேலிடம் கடுப்பாகிடுச்சு... உடனே, ஒரு பிரதிநிதியை சென்னைக்கு அனுப்பி, ஆர்.கே.நகர் தோல்வி பத்தி ஆய்வு நடத்தி, அறிக்கை தரும்படி கேட்டதுங்க...


''அவரும், தமிழகம் வந்து, விசாரணை நடத்தி, அறிக்கை தயார் பண்ணிட்டாருங்க... டில்லிக்கு போகும் போது, 'அ.தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக் காட்டணும்... சசிகலா குடும்ப ஊழல்களை எல்லாம், தமிழக மக்களிடம் நல்லா பிரசாரம் செய்யுங்க'ன்னு தமிழக, பா.ஜ., தலைவர்களுக்கு, அறிவுறுத்திட்டு போயிருக்காருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.


''ஆர்.கே.நகர் சம்பந்தமா, என் கிட்டயும் ஒரு தகவல் இருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''ஆர்.கே.நகர்ல, ஈசியா ஜெயிச்சிடுவோம்னு, அ.தி.மு.க.,வினர் நினைச்சிருந்தாங்கல்லா... அதோட, ஓட்டுக்கு, 6,000 ரூபாய் வேற குடுத்திருக்காவ வே... ''பிற மாவட்டங்கள்ல இருந்து வந்த கட்சிக்காரங்களை, 25 வாக்காளர்களுக்கு ஒருத்தர் வீதம்னு பிரிச்சு, ஒன்றரை
லட்சம் ரூபாயா குடுத்திருக்காவ...


''இதுல, சிலர், 4,000, சிலர், 2,000 ரூபாயை மட்டும் குடுத்துட்டு, மிச்சத்தை சுருட்டிட்டாவ... இன்னும் சிலர், பணமே குடுக்காம, ஊருக்கு பஸ் ஏறிட்டாவ வே... ''இப்படி, யார் யார் பணத்தோட, 'எஸ்கேப்' ஆனாங்கன்னு பட்டியல் தயாரிச்சிட்டு இருக்காவ... அவங்க மேல, சீக்கிரமே நடவடிக்கை எடுக்க போறாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.


''எல்லாரும் ஆந்திராவுக்கு படையெடுத்து போயிட்டாங்க பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அன்வர்பாய்.


''அங்க ஏதாவது திருவிழா நடக்கறதா என்ன...?'' என, விசாரித்தார் குப்பண்ணா.


''இல்லைங்க... ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை பிரிச்சதுல, ஆந்திராவுக்கு, அமராவதியில புதிய தலைநகரை, முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவாக்கிட்டு இருக்காரு பா...


''இப்போதைக்கு விஜயவாடாவுல, தற்காலிக தலைநக ரம் இயங்குது... பல ஆயிரம் கோடி ரூபாய் செலவுல, அமராவதியில உள் கட்டமைப்பு வசதி களை உருவாக்கிட்டு இருக்காங்க பா...


''தமிழக அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கான்ட்ராக்டர்கள், அமராவதியில நிறைய டெண்டர்களை எடுத்து செய்றாங்க...


''தமிழகத்துல, ஒரு வருஷமா ஆட்சி நிர்வாகம் தள்ளாடிட்டு இருக்கிறதால, நிறைய பேர் ஆந்திராவுல முகாம் போட்டு, தமிழக, வடமாநில தொழிலாளர்களை வச்சு, வேலை செஞ்சிட்டு இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

மேலும் சில நண்பர்கள் வர, அரட்டை தொடர்ந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement