Advertisement

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகார்: எதிர்க்கட்சிகள் அச்சம்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் பேட்டியளித்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.


ஆலோசனைகாங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் செயல்பாடு குறித்து 4 நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதிகள் பேட்டி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறியதாவது: கோர்ட்டில் நடப்பதை பொது வெளியில் கொண்டு வர வேண்டிய சூழ்நிலைக்கு நீதிபதிகள் தள்ளப்பட்டனர்.

இது இந்திய வரலாற்றில் கறுப்பு நாள். நீதிபதிகள் எழுப்பிய பிரச்னை குறித்து தேசம் விவாதிக்க வேண்டிய நேரம் இது. தலைமை நீதிபதியும், சம்பந்தப்பட்ட நீதிபதியும் இது குறித்து ஆலோசனை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் பெருமைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் என்ன இருக்கும். ஜனநாயகத்தின் தூணாக கோர்ட் இருக்க வேண்டும். அது எவ்வாறு இயங்கிறது என்பதை கவனிக்க வேண்டியது சட்ட அமைச்சரின் பொறுப்பு.


மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறுகையில், நான்கு நீதிபதிகளின் கருத்து எங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை மற்றும் நேர்மை ஆகியவை எப்படி பாதிக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் எந்த பிரச்னை எழுந்தாலும் அவை சரி செய்யப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் டி.ராஜா கூறியதாவது: நீதிபதி செல்லமேஸ்வரரை நீண்ட நாட்களாக தெரியும். அவரும் மற்ற நீதிபதிகளும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்த போது, அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். நாடு மற்றும் ஜனநாயக நலன் குறித்து அனைவருக்கும் கவலை உள்ளது.

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கங்குலி கூறுகையில், பிரச்னை குறித்து கேள்விப்பப்பட்டதும் கவலையடைந்தேன். இது நடந்திருக்கக்கூடாது. ஆனால், நீதிபதிகளுக்கு வலிமையான காரணங்கள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (53)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  எதிர் காட்சிகள் அச்சமா ?? உங்க தலைப்பு சரி இல்லை . ஆளும் கட்சி தான் அச்சத்தில் உள்ளது உண்மை இது தான் இதை போட மனம் இல்லை வழக்கம் போல உண்மைன் ஓரை கல் பனியில் உறைந்து போச்சா ????

 • ThanuSrinivasan -

  ஐயா, உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், ஜோஸப் குரியன், மதன் லோகுர் ஆகியோர் ஊடகங்களிடம் சென்று தலைமை நீதிபதி அவர்களை பற்றிய புகார்களை கூறி தாங்கள் நீதிபதியாக இருக்க தகுதி அற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். தாங்கள் எழுதிய கடிதத்திற்கு நான்கு மாதங்களாக தலைமை நீதிபதி பதில் அளிக்காததால் பத்திரிக்கையாளர்களை சந்தித்ததாக கூறுகின்றனர். இவர்களுக்கு அவர் மீது அபிப்ராயம் பேதங்கள் இருந்தால் ஜனாதிபதி, ப்ரதமர் அல்லது சட்ட துறை அமைச்சர் ஆகியோரிடம் அல்லவா கூறியிருக்க வேண்டும். இவர்களின் ஒரு குற்றச்சாட்டு, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பதாகும். உனக்கு எந்த வழக்கை அவர் ஒதுக்கினால் என்ன: ஒதுக்கீடு செய்த வழக்கை நீ நடத்த வேண்டியதுதானே. லட்ச கணக்கில் லஞ்சம் கொட்டும் வழக்குகள் எதனையும் இவர்களுக்கு ஒதுக்க வில்லை என்பதே இவர்களின் குற்ற பாட்டிற்கு காரணம். இல்லாவிட்டால் வழக்குகள் ஒதுக்கீடு குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? ரகசிய காப்பு ப்ரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்ட இவர்கள் நால்வரையும் ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவர்கள் ஏற்கனவே வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவை சந்தித்துள்ளார். இவர்கள் சதியின் நோக்கம் நமக்கு புரிகிறது.

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  நீதிமன்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஏதாவது நடக்கிறதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளது ரிபப்ளிக் டிவி... 1984 சீக்கிய படுகொலை பற்றி விசாரணைக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்ட பிறகு தான் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது... உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி திரு தீபக் மிஸ்ரா 1, 1984 சீக்கியர் மரணங்களை திரும்ப விசாரிக்க உத்தரவிட்டுள்ளார், 2, ராம் ஜென்ம பூமி வழக்கை கையாளுகிறார். 3, நரேந்திர மோடி அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். இரண்டுவாரங்களுக்கு முன்னால் இந்த நாலு நீதிபதிகளையும் கம்யூனிஸ்ட் டி. ராஜா சந்திக்க அவசியம் என்ன ? எதற்காக கம்யூனிஸ்ட் டி. ராஜாவை பேட்டியளிக்கும் முன்பு நீதிபதிகளை சந்தித்க வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்பு எதற்காக கம்யூனிஸ்ட் டி ராஜவை நீதிபதி சந்தித்து பேச வேண்டும் என்று அர்னாப் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டி. ராஜா வெளியே சென்று விட்டது ஏன்? ராபர்ட் வதேரா வழக்கு வழக்கறிஞர் துளசி எதற்காக இந்த நீதிபதிகள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பற்பல சந்தேகங்களை ரிபப்ளிக் டிவி கேட்டு வருகிறது... கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லோயா அறையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நீதிபதி லோயா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, ஏ.எம்.கன்வீல்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. // தீபக் மிஸ்ரா ஏற்றவுடன் அடுத்த நாளே அவர் மீது குற்றச்சாட்டா ? இப்போ புரியுதா ஏன் இந்த நாலு ஜட்ஜூகளின் டிராமாவும் அதன் பின்புலமும்.. இவர்கள் பேசுவதை பார்த்தால் மத்திய அரசை விமர்சனம் செய்ய வருவது போல் உள்ளது இதன் பின்னால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இருக்கிறது என்பது தெளிவாகிறது இந்த காங்கிரஸ் பின்னால் சீனா, பாகிஸ்தான் என்று எத்தனை நாடுகள் உள்ளன ?

 • அப்பு -

  என்ன செய்வது? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒவ்வொருத்தரும் ஒரு ஜாதி..ஒருத்தரும் ஜாதிப் பேரை விட்டுக்குடுக்க மாட்டாங்க

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  இந்த நீதிபதிகள் எல்லாம் முதலில் ஹிந்துக்கள் தானா என்று அக்கினியில் இறங்கி சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் ,

 • திராவிடன் - chennai ,இந்தியா

  2ஜி தீர்ப்புல கடுப்பாகியிருப்பாங்களோ 😉

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  என்னடா ராமா ராஜ்யத்துக்கு வந்த சோதனை ?

 • Siva - Aruvankadu,இந்தியா

  மோடி என்னும் ஒரு மாபெரும் தலைவர். ஒத்த ஆளை கவிழ்க்க என்ன ஓரு .............தனம். திரும்பவும் மோடி ஜி ஆட்சி தான்..... கண்டிப்பாக இந்தியனுக்கு விமோசனம் தருவார். தறுதலை தமிழன் யோசிக்கனும்

 • Raghu -

  இந்த நீதிபதிகள் ஊடகங்களில் பேட்டி அளித்தது மிகவும் மடத்தனம் ! கடுமையான வார்த்தை என்ன செய்வது அவர்கள் நடத்தையை இதை விட நாகரிகமாக விமர்சிக்க முடியாது ! நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் பொதுவாக யாரும் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசுவதில்லை ஆனால் இவர்களது நடத்தை மிகவும் மட்ட ரகமாக இருக்கிறது !Very very unfortunately !

 • siriyaar - avinashi,இந்தியா

  Next congress will army revolt

 • siriyaar - avinashi,இந்தியா

  Now only way for Bjp is to release corrupt judges video

 • Prakash JP - Chennai,இந்தியா

  உச்ச நீதிமன்ற குழப்பங்களும் பாஜகவும் உச்ச நீதி மன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள், இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இது போல் ஒரு நிகழ்வு நடந்ததில்லை. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை கூறி உள்ளனர். அதில் முக்கியமானது, இறந்து போன நீதிபதி லோயா பற்றியது. பாஜகவின் தலைவர் அமித் ஷா சம்மந்தபட்ட ஷொராபுதின் கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தான் லோயா அவர்கள். அவரும் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மர்ம மரணத்தை விசாரிக்க உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி, அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் நீதிபதி அருண் மிஸ்ரா என்பவர் முன்னிலையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வைக்கபடும் மற்றொறு குற்ற சாட்டு, இது போல முக்கியமான வழக்குகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகள் முன்னிலையில் அந்த வழக்கை அனுப்பி, அரசுக்கு அனுகூலம் செய்கிறார் என்பதாகும். இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் மாண்புகளையும் திட்டமிட்டு சிதைத்து வருகிறது பாஜக.

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  jayam tamila yanda ipadi muttala irukka pannadi mathiya arasu thalai iduthunna solla vandiyatju thaney ethulainnu ithunaivarusama thalaiidamathan irumthatha pannadai

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  வழக்குகளை ஒதுக்கீடு செய்வது குறித்த பிரச்னையை, இந்த நான்கு நீதியரசர்களும், வெளியுலகில் சொல்றாப்பா. அதாவது "கடமையை செய், அதற்கு பலனை எதிர்ப்பார்க்காதே", இது பகவத்கீதையில் கூறப்படும் வாசகம். இன்னும் ஒருபடி, மேலே சென்று கூறுவதானால், "அதே கடமையில், சாதாரண மற்றும் முக்கியத்துவம்", என்ற பேதங்கள் பார்க்காமல் கடமை செய், என்பேன் நான். உதாரணம், இராணுவ வீரர்கள், சிலர் சேற்றிலும், சிலர் நீரிலும், சிலர் தரையிலும், சிலர் மலையிலும், சிலர் வயல்களிலும், சிலர் காடுகளிலும், சிலர் பனியிலும், சிலர் பாலைவனத்திலும், சிலர் ஆறுகளிலும், சிலர் கடலிலும், சிலர் ஆகாயத்திலும் சென்று, பயணித்து, தங்கி, வலம்வருதல் போன்ற பற்பல கடமைகளை, ஆற்றி வருவதனால் தான், நம் ஒட்டு மொத்த இந்தியாவும் பாதுகாப்பாக இருக்கின்றது எனலாம். அடடா, இது என்ன?, இவர்களின் புகார், குழந்தைகள் போல?. (என் கருத்து சரியா, வாசகர்களே?).

 • suresh - chennai,இந்தியா

  இந்தியா என்ற தேசம் , இன, மொழி, மத வாரியாக பிரிக்க பாஜக கொண்டு செல்கிறது , இதுவே மாநில பாஜகவும் மத்திய பாஜகவும் செய்கிறது

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  5000 வருட ஜல்லிக்கட்டு தீபாவளி கலாச்சாரம் 60 வருட நீதித்துறையை மதிக்க வேண்டும், சரிங்க ரைட்டு. ஆனால் 282 சீட் பெற்று மக்கள் பாராளுமன்றம் நிறைவேற்றிய நீதித்துறை சீர்திருத்தமான NJAC சட்டத்தை எதற்கு தடுத்தீர்கள்? உங்களுக்கு என்ன உரிமை உள்ளது, அதுவே உண்மையான ஜனநாயக படுகொலை.

 • siriyaar - avinashi,இந்தியா

  Modi made same side goal ( 2G and AIRCEL) entire his team upset, at this time raghul kick the ball, good move in good timing by congress. It is time for modi to leave marvadi consultants ( who sells anything for money) and work for nation else prepare to quit.

 • bal - chennai,இந்தியா

  இந்த காங்கிரெஸ்க்காரர்கள் ஒன்றும் யோக்கியம் இல்லை. அரசு விருது திருப்பம் கும்பல், ஜிக்னேஷ் மேவனியுடன் கூட்டு, என்றெல்லாம் பிரிவினை ஊக்குவிப்பவர்கள். இது கூட இவர்களது யுக்தியாக இருக்கும்

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  பலமுறை எழுதியது தான், குறைந்தது தினமலராவது மாற்றிக்கொள்ளலாம்.. நீதிபதி நீதியரசர் நீதிக்காவலன் நீதிமந்திரி என்று ஜனநாயக காலத்தில் என்ன பட்டங்கள் இவர்களுக்கு. ஜட்ஜ் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் நடுவர், தீர்ப்பளிப்பவர் என்றுதானே இருக்கிறது.. எனவே இனிமேலாவது இவர்களை "சட்டநடுவர்" அல்லது "சட்டத்தீர்ப்பர்"" என்று பெயரை மாற்றுவோம்.. பஸ்ஸை '"பேருந்தாக", சைக்கிளை "மிதிவண்டியாக்கி"" சாதித்ததை இவர்களுக்கு செய்தால் தமிழ் நமது சட்டங்களைப்போல தரம் தாழ்ந்தா போய்விடப்போகிறது...

 • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

  நீதிபதிகள் எழுப்பிய பிரச்னை குறித்து தேசம் விவாதிக்க வேண்டிய நேரம் இது.

 • v rajagopal - Chennai,இந்தியா

  ராஜா போற இடமெல்லாம் பிரச்சினை தான். அந்த ஆளுக்கு நல்லதே பிடிக்காது. ஏன்னா தமிழ்நாட்ட சேர்ந்ததுனால அப்படித்தான். இங்க இல்லையா அனிதா மரணத்தில் குளிர்காய்ந்த கூட்டங்கள்

 • Pats - Coimbatore,இந்தியா

  1. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா (இவர் முன்னாள் தலைமை நீதிபதியும் பிறகு காங்கிரஸ் எம்பியாகவும் இருந்த ரங்கநாத் மிஸ்ராவின் மருமகன்.). - இவர் பிஜேபி அரசின் JAC எனும் ஜூடிசியல் அக்கவுண்டபிலிட்டி கமிஷன் எனும் அமைப்பை எதிராகவும் தற்போது உள்ள கொலீஜியம் முறையே (நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் வழக்கம்) தொடவேண்டும் என்று சொல்லி பிஜேபி அரசை எதிர்ப்பவர். 2. இவரை எதிர்ப்பவர்கள் நீதிபதி சலமேஸ்வர் தலைமையில் 4 பேர் - இவர் பிஜேபி அரசின் JAC எனும் ஜூடிசியல் அக்கவுண்டபிலிட்டி கமிஷன் எனும் அமைப்பை ஆதரிப்பவர். மேலும் இவர் தற்போது உள்ள கொலீஜியம் முறை ஒழிய வேண்டும் என்று சொல்பவர். 3. நீதிபதி. ரஞ்சன் கோகாய் என்பவர் அடுத்த தலைமை நீதிபதியாக கொலீஜியம் முறையில் வர முயற்சிப்பவர். இவர் கொலீஜியம் முறையை ஆதரிப்பவர். 4. நீதிபதி. குரியன் ஜோசப் என்பவர் பிரதமர் ஏற்பாடு செய்த நீதிபதிகள் மாநாட்டில் ஈஸ்டர் பண்டிகை அன்று வரமுடியாது என்று பத்திரிகையில் அறிக்கை விட்டவர். (புனித வெள்ளி அன்று தான் அரசு விடுமுறை, ஈஸ்டர் அன்று அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.) 5. நீதிபதி. மதன் லோகுர் என்பவரை பற்றி எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லவும். 6. முக்கியமாக சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்துவந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா என்பவர் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் நீதிபதி லோயா புனே நகரில் நடந்த அவரது உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாரடைப்பால் இறந்தார். இவர் இறந்ததில் சந்தேகம் உள்ளது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அவர் உண்மையிலேயே மாரடைப்பால் இறந்தார் என்று தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அதை யார் விசாரிப்பது என்ற முடிவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சலமேஸ்வர் இருவருக்கும் மோதல். நீதிபதி சலமேஸ்வர் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் வழக்கை அனுமதிக்காமல் வேறு அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மாற்றினார். வழக்கை எந்த அமர்வுக்கு அனுப்புவது என்பது தலைமை நீதிபதியின் உரிமை என்று சொல்லிவிட்டார். இதுதான் முக்கிய பிரச்சனை. ஈகோ பிரச்சனை. கொடிபிடித்து ரோட்டுக்கு வந்துள்ளார்கள்.

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  இந்த நான்கு நீதிபதிகளும் ஆர் எஸ் எஸ் இன் தூண்டுதலின் பேரில் பிரச்சனையை ஆரம்பித்துள்ளனர் [ இப்படி கருத்து சொன்னால் தான் மத சார்பற்ற உதவக்கரைகளின் ஆதரவு கிடைக்கும் ]

 • Kannan - Chennai,இந்தியா

  It is time to eradicate Collegium and get NJAC (National Judiciary Appointments Commission) which has to conduct IAS, IPS like exam IJS to recruit Judges. Implement Art 312 A of constitution for IJS… Judges need to Accountability Act and appraisal cycle to review their accountability. Why no accountability for Judges?

 • suresh - chennai,இந்தியா

  உச்சநீதிமன்றத்தில் தலையீடு, பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநரை விட்டு ஆட்சியில் தலையீடு, எப்போது தேர்தல் என்பதில் தேர்தல் ஆணையத்தில் தலையீடு என அதிகார போதையால், மேலும் அதிகாரம் வேண்டும் என்ற அதிகார பசியாலும், 29 மாநிலங்களில் பாஜக அகோரா பசியில் அலைகிறது. ராமராக வந்து ராவணனாக பாஜக மாறி விட்டது.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  கட்டுரை தலைப்பு ட்ரிக்கியாக உள்ளது... நீதிபதிகள் புகார் ...எதிர் கட்சிகள் அச்சம்...சொல்ல வந்த விஷயம் என்ன?..[ ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு ..அப்படிதான் உள்ளது தலைப்பு ..] .... ஒரு பெரிய கட்சியின் தலைவர் பற்றிய குற்றசாட்டை விசாரித்த, நீதிபதி 2014 டிசம்பர் 1 இல் மர்மமாக இறந்தார்... ஆனால் அதனை பற்றி எந்த ஆங்கில ஊடகம் கூட வாய் திறக்கவில்லை.. இப்போது தான் சில ஊடகங்கள் வாய் திறக்கின்றன... அதுமட்டும் அல்ல, மாறன் கேஸ் , 2G கேஸ் ஆகிய விஷயங்களிலும், தீர்ப்புக்கள் விசித்திரமாக இருந்தன.... ஆனால் 70 லட்ச லல்லு ஊழல், 29 கோடி ஜெ ஊழல்களில் தீர்ப்புக்கள் கடுமையாக உள்ளன... இதெல்லாம் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிறது என்று நீதிபதிகள் சொல்வது, CJI ஐ குற்றம் சாட்டுவது, பின்புலத்தில் ஆளுமை உள்ளது என்று சொல்வது, நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது...... மத்திய அரசு வசமாக மாட்டிக்கொண்டுள்ளது...மக்கள் கையில் தான் நீதி என்று இந்த நீதிபதிகள் சொல்வது ஆயிரம் அம்புகளை கொண்டு மத்திய அரசை தாக்குவதற்கு சமம்...ஆனாலும் மவுனியாக மத்திய அரசு உள்ளது... இனி இந்த அரசுக்கு ராகுகாலம் தான்....

 • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

  அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்கு இப்போவே ஆயத்தமா?

 • venkatan - Puducherry,இந்தியா

  நீதிமான்களை தேர்வு செய்வது நம் எம்.எல்.எ, எம்.பி,ஜனாதிபதி,மந்திரியை தேர்வு செய்வது போல் அல்ல.ராணுவத்துக்கு தேர்வு செய்வது போன்றது.இங்கு சாதி,இனம்,மொழி,மதம்,ஆண் பெண் என்ற பேச்சிற்கே இடமளிக்க க் கூடாது.கண்ணியம்,நேர்மை,மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்தால்தான் நீதி வாழும்,தர்மம் வெல்லும்.

 • yaaro - chennai,இந்தியா

  இப்போ ஏன் இந்த ப்ரிச்சனை கிளம்புதுன்னு யோசிச்சா..ஒண்ணே ஒண்ணுதான் சொல்ல முடியும் - உச்ச கோர்ட் 84 சீக்கிய படுகொலைகளை திரும்ப விசாரிக்கணும்னு ஆரம்பிச்சதுதான் சொல்ல முடிகிறது. எப்படியாவது முக்கிய கேஸ் எல்லாத்தையும் கிடப்புல போட்டுட்டு தேர்தலை சந்திப்பது என காங்கிரஸ் முடிவுக்கு வந்திருச்சு.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  மக்கள் ஆட்சியின் தூண்களான , சட்ட சபை , , நிர்வாகம் , நீதித்துறை மூன்றும் இன்று மிகவும் தரம் தாழ்ந்து விட்டது . , இவைகளை சீர் செய்ய வேண்டுமானால் வலிமையான , நேர்மையான , செயல் திறன் கொண்ட இளைஞ்சர் அமைப்பு உருவாக வேண்டும் .கேள்வி குறிதான்

 • yaaro - chennai,இந்தியா

  நீதிபதி சேமேலேஸ்வர் நம்ம கம்ம்யூனிஸ்ட் டேனியல் ராஜாவை சந்தித்து பேசியது , மற்றும் இந்த ஒருங்கிணைந்த தாக்குதல் பார்க்கும் போது.. தலைமை நீதிபதியை கவுக்க பிளான் போட்டிருப்பது தெளிவா தெரிது

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  அட குவாட்டர் கோவிந்தா, அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கும் உனக்கு நீதித்துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் போதையில் உளராதே. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் தான் இதற்கு காரணம். டி. ராஜா சுப்ரீம் கோர்ட் நீதிபதியை இன்று சந்தித்து இருக்கின்றார். என்ன காரணம். பழைய முறைகளை மாற்றி எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று மோடிஜி சர்க்கார் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கிறது. இதை நீதிபதிகள் தடுக்கின்றனர். நாட்டின் எதிரிகள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள். ஊழலின் மொத்த உருவமாக இவர்கள் நாட்டை விட்டு ஒழியும் வரை இந்தியா உருப்படாது

 • G Mahalingam - Delhi,இந்தியா

  Why D Raja met Supreme Judge . No answer?

 • மனோ - pudhucherry,இந்தியா

  கோவிந்தா ஒரு முறை குவாட்டர் அடிச்சா போதாதா... சும்மா சும்மா அம்மா குடுத்த குவாட்டர் அடிச்சுட்டு மோடி ஆட்சிய கலைக் குறதுலயே இருக்கியே

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு அறுதி பெருன்பான்மையில் தேர்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வந்த NJAC சீர்திருத்தம் வந்தால் தங்கள் மகன், சொந்தங்கள் காலேஜியம் முறையில் நீதிபதி ஆக முடியாது என அந்த சட்டத்தையே தன்னிச்சையாக சில நீதிபதிகள் நிராகரித்த போதே ஜனநாயகம் சாகடிக்க பட்டு விட்டது. நீதித்துறை சரியானால் நாட்டில் அத்தனையும் சரி ஆகும், பாஜக அரசு அது செய்யவே முயல்கிறது. ஆனால் பல வருடங்களாக பழம் தின்று கொட்டை போட்ட இது போன்ற நீதிபதிகள் அதை செய்யத்தான் விட மாட்டேங்கிறாங்க. எதற்காக குறிப்பாக சில பல பெரிய கேஸ்கள் மட்டும் உங்களுக்கு வேண்டும், எதற்காக நீதித்துறையில் கேஸ்கள் எண்ணிக்கையில் இவ்வளவு தேக்கம், நீதிபதிகள் எதற்கு அரசியல் செய்கிறீர்கள் என்றெல்லாம் நம் ஊடங்கங்களும் மக்களும் இவர்களை கேள்வி கேட்க வேண்டும். இதே நீதிபதிகள் இந்துக்கள் பாரம்பரியங்கள் எதிர்ப்பு என்று மட்டும் வந்துவிட்டால் என்னவெல்லாம் செய்ய துணிகிறார்கள் ஆண்டவா...

 • murugu.Chennai -

  Its time to change also the political administration. Because they must have the whole responsible for this incident.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எதிர்க்கட்சிகள் அச்சப்பட தேவை இல்லை. காங்கிரஸ் தான் இந்த நிலையை உருவாக்கி இருக்கிறது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நீதிபதிகளுக்கும் ஜனநாயகத்துக்கு சம்பந்தமே இல்லை... இதில் பலர் இடதுசாரிகளின் நண்பர்கள்... நீதிபதிகளை பதவியை விட்டு தூக்கவேண்டும்... மிஸ்ரா யாகூப் மேமனை தூக்கி சாதனை படைத்தவர்... கெஜ்ரிவாலை, இராகுலை வழக்கை எதிர்நோக்கச்சொன்னவர்... ஆகவே இவர்கள் கூக்குரலிடத்தான் செய்வார்கள்...

 • தாமரை - பழநி,இந்தியா

  2G வழக்கில் தீர்ப்புக் கூறினாரே ஒரு நீதியரசர். அப்புறம் குமாரசாமி,இவர்களின் தீர்ப்பையெல்லாம் பார்க்கும்போது என்ன தகுதியின் அடிப்படியில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்புறம் கர்ணன் என்பவர்....

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  ஆச்சிய கலைக்கனும் நைனா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement