Advertisement

இந்தியா பலவீனமான நாடல்ல: ராணுவ தளபதி

புதுடில்லி: சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடல்ல என ராணுவ தளபதி பிபின்ராவத் கூறினார்.

டில்லியில் நிருபர்களிடம் பேசிய ராணுவ தளபதி: நாட்டை யாரும் துண்டாட இந்தியா அனுமதிக்காது. சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடல்ல. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை குறித்த பாதிப்பை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நவீன ஆயுதங்கள் தேவை:டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பேசுகையில், வேதியியல், உயிர் வேதியியல், அணு ஆயுதங்கள் மூலம் உருவாகும் அச்சுறுத்தல்கள், பயங்கரவாதிகளால் சாத்தியமாகும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு துறை, தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீன ஆயுதங்கள் இறக்குமதி மற்றும் வீரர்களுக்கு நவீன பயிற்சி அளிப்பதே சிறந்த வழியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்தியா உலகின் குருவாக மாறி வரும் தருணம் இது. குரு என்றால் தலைவன். ஆன்மீகத்தில், பொருளாதாரத்தில் மற்றும் ராணுவ வலிமையில். ராணுவ வலிமையில்லாத எந்த நாட்டையும் யாருமே மதிக்கமாட்டார்கள். அது போல ராணுவ வலிமையிருக்கும் எந்த நாட்டையும் யாரும் சீண்டி பார்க்க மாட்டார்கள். தற்போது இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக வலிமையாக இருக்கிறது

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஸ்டார் வார்ஸ் என்று வந்தால் எந்த நாடும் எந்த நாட்டையும் அடிக்க முடியும். நாம் விளையாட்டில் கையாலாகாதவர்களாக இருக்கலாம்.ஆனால் ஸ்டார் வார்ஸ்-க்கு மூளைதான் தேவை.அதனால்தான் வட கொரியாவின் பெயரைக் கேட்டாலே அமெரிக்காவுக்கு உதறல் எடுக்கிறது.

 • bal - chennai,இந்தியா

  மக்களுக்கு ராணுவம் மீது மிகுந்த மதிப்பு உள்ளது. அதனால் நீங்கள் கவலைப்படாமல் ஏதும் பேசாமல் திறமையை வெளிப்படுவதில்லை இறங்குங்கள்.

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  அரசின் மிகசிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்றோரரை உங்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த தேவையானவற்றை அரசிடம் இருந்து பெற முடியவில்லை,, கண்டுபிடிக்கிறோம் என்று வேலைக்கு சேர்ந்து பணி ஓய்வு பெற்றவர்களும் அதிகம்.. முதலில் உங்களை போன்றோர் புதிதாக சிந்திக்க முயற்சித்தால் வலிமை சொல்லிக் கொள்ளாமல் பிறக்கும்..

 • Ramesh M - COIMBATORE,இந்தியா

  மொழி, மதம் மாநிலம் என நம்மை துண்டாட எதிரி நாடுகள் நம் சில அரசியல் வாதிகள் மூலம் செயல்படுத்த நினைக்கிறது. மக்களாகிய நாம் பிரிவினை வாதம் பேசும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியில் சிக்காமல் நாம் ஒற்றுமையுடன் இந்தியன் என்ற ஒருமைப்பாட்டுடன் இருக்கவேண்டும். இதுவே நம் பலமாகும். இது என் நாடு. என் மக்கள். My Country My People .

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அனைவருக்கும் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழர் திருநாளாம் பொங்கலில் தமிழர்கள் வாழ்வில் வசந்தம் மலரட்டும். இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, மொழி செழிக்கட்டும்.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  இவரு தோளில மூணு சிங்கம், வெட்டுக்கத்தி, நட்சத்திரம் மூணும் போட்டு இருக்காரு. இந்திய தரைப்படை முழுக்க சேத்து ஒரே ஒரு ஆளுதான் மூணும் கொடுப்பாக. மத்தவங்க எல்லாரும் ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. ஆனா ஒவ்வொரு மாநிலமும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு இந்த அந்தஸ்து கொடுக்குது. அது சரி இல்லைன்னு தோணுது. ஒரு மாநில தலைமை போலீஸ் அதிகாரி ராணுவ தலைவருக்கு ஒரு படி கீழ தான் இருக்கணும், சம உரிமை தர கூடாது.

 • புன்னகைமன்னன் -

  நானும் ரவுடி தான்... யா...

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  இப்படி பேசி பேசி மற்றவர்களை உசுப்பேத்திவிட வேண்டாம். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. சக நாடுகளுடன் நட்புறவு கொண்டு , பாதுகாப்புக்கு என்று ஆகும் அபரிமிதமான செலவுகளை குறைத்து மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் , வாழ்க்கை தரம் உயர வேண்டும். எல்லா நாடுகளிடம் தோழமை பாராட்டி வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். அமெரிக்கா , மேற்கத்திய நாடுகள் தன்னுடைய தளவாட பொருட்களை விற்பனை செய்வதற்காக சண்டை மூட்டிவிட துடிக்கும். ஆனால் அதிலிருந்து தப்பிப்பது தான் திறமை .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement