Advertisement

ஜெ., மரணம்: ஆவணங்களை தாக்கல் செய்தது அப்பல்லோ

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்கள் விசாரணை தாக்கல் செய்யப்பட்டது.

ஆவணங்கள் தாக்கல்



ஜெ.,க்கு அளித்த சிகிச்சைகள் குறித்த, அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதைதொடர்ந்து, இரண்டு சூட்கேஸ்களில், சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், கமிஷனில், நேற்று சமர்ப்பித்தது. இது தொடர்பாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பு: கடந்த, 2016, செப்., 22ம் தேதி, மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டதில் இருந்து, டிச., 5ம் தேதி வரையிலான, அனைத்து அசல் மற்றும் நகல் மருத்துவ ஆவணங்களை, 30 தொகுப்புகளாக தாக்கல் செய்துள்ளோம். மேலும், இது தொடர்பான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இழுத்தடிக்க சசி தரப்பு சதி!



மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் புகார் கூறியுள்ளன.ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், சசிகலா தரப்பு விளக்கத்தை கேட்டு, 2017 டிச., 21ல், பெங்களூரு சிறைக்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. இதையடுத்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர், ராஜா செந்துார்பாண்டியன், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் பட்டியலை தருமாறும், பட்டியல் கிடைத்த, 15 நாட்களில் ஆஜராகி அறிக்கை சமர்ப்பிப்பதாகவும், கமிஷனில், ஜன., 5ல், மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணைக்கு, கமிஷனில், ராஜா செந்துார்பாண்டியன் ஆஜரானார். அதன்பின், அவர் கூறியதாவது: விசாரணை கமிஷன், சசிகலாவிற்கு, 'சம்மன்' அனுப்பி இருந்தது. விசாரணைக்கு, நாங்கள் ஒத்துழைக்க தயார் என்றும், சசிகலா மீது புகார் கூறியவர்கள் குறித்த தகவல்களை அளிக்க கோரியும், மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில், நாங்கள் மனு அளித்த பின்னும், பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. எனவே, அனைவரிடமும் முழுமையாக விசாரணை முடிந்த பின், இயற்கை நீதி அடிப்படையில், அவர்களிடம், நாங்கள் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு, மற்றொரு புதிய மனுவையும் தாக்கல் செய்துள்ளோம்.

அதனால், சசிகலா மீது புகார் அளித்தவர்கள் யார்; என்ன புகார் கூறினர் போன்ற தகவல்கள் கிடைத்த, 16வது நாள், கால அவகாசமின்றியும், தாமதமின்றியும், கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம். மேலும், இந்த மனு மீதான வாதம், ஜன., 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், சட்டத்தின் மீதும், கமிஷன் மீதும், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சசிகலா தரப்பு, முதலில் மனு தாக்கல் செய்தபோதே, அனைத்து தகவல்களையும் தர, கமிஷன் தயராக இருந்தது. ஆனால், சசிகலா, தங்களிடம் உள்ள ஆவணங்கள் எதையும், இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஆனால், மற்றவர்களிடம் விசாரணை முழுமையாக முடிந்த பின், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால், விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு ஈடுபட்டுள்ளதாக, கமிஷன் வட்டாரங்கள் கூறுகின்றன.

டாக்டர் ஆஜர்



இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன், விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் 'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அவரை நான் பார்க்கவில்லை; அவருக்கு, சிகிச்சை அளிக்கவில்லை' என, ஜெ.,க்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிக்கும் குழுவில் இருந்த, அரசு டாக்டர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (16)

  • Amma_Priyan - Bangalore,இந்தியா

    பென் ட்ரைவில் கொடுக்க உத்தரவு போடவும்.

  • அப்பு -

    இட்லி சாப்பிட்டதுக்கான பில் ஒரிஜினல் இருக்கான்னு பாருங்க எசமான்.

  • anbu - Coimbatore,இந்தியா

    இதுவரை விசாரணை நடத்தி இருக்கும் ஐயா இனி நீங்கள் பத்திரங்கள் களவு போகாமலும் பிரதி எடுக்காமலும் பத்திரமாக பாதுகாக்கவும் இல்லை என்றால் கருப்பு ஆடுகள் உங்களையும் பதம் பார்க்கும்......

  • kundalakesi - VANCOUVER,கனடா

    இதெல்லாம் மரண துப்பு துலக்குவதை விட, ஆணிக் கட்டை போட்ட கொலைகார கும்பலை பிடிக்க உதவினால் சரி. ஹ்ம்ம், அது எங்கே.

  • Muthuselvakumar Palani - CHENNAI,இந்தியா

    விசாரணை விரைவாகட்டும் ... .உண்மை மர்மம் இல்லாமல் வெளியாகட்டும் ...........எவரேனும் தப்பு செய்து இருந்தால் ..பாரபச்சமின்றி தண்டனை கிடைக்கவேண்டும் .

  • Sangeedamo - Karaikal,இந்தியா

    தெய்வமே போன பின்னே ஆரத்தி எதற்கு, அபிஷேகம் தான் எதற்கு? சும்மா கெடந்த சங்கெல்லாம் இப்போ ஊத கெளம்பிடுச்சிங்க அம்மா இருந்திருந்தால், நம் தமிழ்நாடு கொடுத்துவைக்கவில்லை அவ்வளவுதான்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    ரெண்டு பொட்டியா....

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    சிகிச்சை முடிந்து போகும்போதே /மரணமடைந்து உடலை தரும்போதே டிஸ்சார்ஜ் சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு இரண்டு பெட்டிகளில் ஆவணங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இது கண்டிப்பாக ஏமாற்று வேலை , இதை படிப்பவர்களை குழப்புவதற்கு உருவாக்கப்பட்ட ஆவணங்கள்.

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழும் அய்யய்யோ ஆஸ்பத்திரியே ரெட்டியே உண்மையை கக்கு, வேதனையை உதறு

  • kowsik Rishi - Chennai,இந்தியா

    ஐயா ஆறுமுகசாமி அவர்களே எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ வின் மரணம் - அரசியல் ஆக்கப்படுகிறது - நீங்களே சொல்லுங்கள் எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ மக்கள் தலைவி - அமோக ஆதரவில் மக்கள் நேசித்த தலைவி அவர் தொடர் ஆட்சி என்று வந்த பிறகு வாழ்ந்து ஆட்சி செய்யவேண்டிய அவர் ஏன் சார் இப்படி விடை பெற்றார் செல்வி ஜெ ஜெ வை பலமுறை பார்த்தவன் நான் - அவர் ஆளுமை கெம்பீரம் ஆட்சி நிர்வாகம் ஆற்றல் உடல் நலம் - நடை பேச்சு எதுவுமே குறை இல்லை அப்படிப்பட்டவர் தீடிரென்று தொடர் ஆட்சி என்று வந்தபிறகு ஏன் சார் இப்படி ????? - இது தான் கேள்வி மு கருணாநிதி, சுப்பிரமணியம் ஸ்வாமி, அப்பாவு, பி எச் பாண்டியன் என்று பட்டியல் நீளும் செல்வி ஜெ ஜெ ஒரு ருபாய் சொத்து வழக்கில் சிக்கவைத்து வாய்தா ராணி, ஊழல் வாதி - ஆட்சி செய்யவிடமாட்டோம் என்று அவரை அரசியல் வன்கொடுமை செய்து அலைக்கழித்தார்கள் தொடர் ஆட்சி என்று வந்தபிறகும் - அவர் வாழ்ந்தால் - குமாரசாமி விடுவித்த பிறகும் மேல்முறையீடு என்று போய் அவரை தற்போது சிறையில் தான் வைத்து இந்த அரசியல் வன்கொடுமை காரர்கள் மகிழ்ந்திருப்பார்கள் செல்வி ஜெ ஜெ விற்கு அது அரசியல் சூன்யம் - அதற்க்கு பிறகு அவர் அரசியல் தலைவி மக்கள் நேசித்த தலைவி என்ற முறையில் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை என்று சிறைக்கு சென்றால் பிறகு அவர் மீண்டும் முதல்வர் ஆகமுடியாது அரசு மரியாதை எம்.ஜி.ஆர் சமாதியில் ஒண்டக்கூட முடியாத ஒரு மரணம் என்று எல்லாம் எங்கள் தலைவி நினைத்து நினைத்து பார்த்து தான் இந்த முடிவில் விடை பெற்றுக்கொண்டார் தொடர் ஆட்சி என்று வாழந்து தனி பெரும் அரசு மரியாதை தனி பெரும் சமாதி நினைவிடம் என்று சீரோடு போக வேண்டியா எங்கள் தலைவி செல்வி ஜெ ஜெ இன்று இப்படி அவசரமாக தன்னிச்சையாக போய் எம்.ஜி.ஆர். சமாதியில் ஒண்டிக்கொண்டார் ஐயா ஆறுமுக சாமீ அவர்களே எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ வை இன்னும் ஏன் சார் இந்த வன்கொடுமை - சசிகலா ஓ வேறே யாரும் இதில் காரணம் இல்லை ஒரு ருபாய் சொத்து வழக்கு தான் காரணம்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஆளே இல்லை ,போய் விட்டார் என்ன பிரயோஜனம் ஒன்றும் இல்லை . ஜி.எஸ்.ராஜன் சென்னை .

  • மனோ - pudhucherry,இந்தியா

    என்னாது எல்லாம் வெத்து பேப்பரா இருக்குது?

  • Vivek Anandan - Singapore,சிங்கப்பூர்

    KINDLY TAKE A COPY OF ALL THE RECORDS IN DIGITAL FORM AS WELL AS THE RECORDING OF ALL STATEMENTS, BECOZ SUDDENLY SHORT CIRCUIT WILL HAPPEN & DUE TO FIRE ALL RECORDS WILL BE VANISHED, SUCH INCIDENTS HAPPEN COMMONLY IN CENTRAL & STATE GOVT DEPARTMENTS, SO BETTER TAKE PRECAUTION STEPS

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    ஒருத்தர் மௌனவிரதம், ஒருத்தர் அழுகை, ஒருத்தர் பைரவ விரதம், ஒருத்தர் வரவில்லை . இப்போது இவர்கள் என்ன குழப்பம் செய்திருக்கிறார்களா. ஆக மொத்தம் எவ்வளவுக்கு எவ்வளவு இந்த விஷயத்தை குழப்பமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு இதில் பிரச்சனைகளை உண்டுபண்ணி இருக்கின்றனர். இது அத்தனையையும் தீர்த்து , ஆறுமுகசாமி உட்கார சீட்டுகூட இல்லாமல். மின்சாரம், இல்லாமல் ஆறுமாதத்துக்குள் கண்டடறிந்து அறிக்கை கொடுக்கவேண்டும். நடக்கிற பிரச்சனையா இது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement