Advertisement

ஆதார் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடு

புதுடில்லி : ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தகவல் பாதுகாப்பு அமைப்பான "டிராய் ஹன்ட்" எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக டிராய் ஹன்ட் தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவின் ஆதார் முறை உண்மையில் பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. யார் வேண்டுமானாலும் அதில் உள்ள தகவல்களை இயக்கும் வகையிலேயே அதன் பாதுகாப்பு உள்ளது. நாங்கள் இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதன் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும், மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது என தெரிவித்துள்ளது.


மேலும், ஹேக்கர்கள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஆதார் இணையதள சர்வரில் உள்ள தகவல்களை திருடி, அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  குழப்பாச்சாரிகளின் அரசு. ஆதாருக்கு பதிலாக16 இலக்க தற்காலிக நம்பர் தருவாங்களாம். பேங்க்கில் அதை குடுத்தா போதுமாம். குடுத்துட்டு மறுநாளே வேற நம்பர் வாங்கிகிட்டா. பேங்க் என்ன செய்யும்?

 • gmk1959 - chennai,இந்தியா

  இது செய்தி உள்நோக்கம் கொன்டது.. ஆஸ்திரேலியா என்றாலே அல்லேலூயா உன்மையிலே இந்தியா மீது பாசம் இருந்தால் அரசிடம் இரகசியமாக பகிர்ந்து கொன்டு இருக்க வேனடும் யாருக்கோ ரகசியமாக வால் பிடிக்கும் வேலை

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   அதானே.. அவன் எப்படி சொல்லலாம்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   இதில் என்ன ரகசியம் இருக்கின்றது ? இது எல்லோருக்குமே 6 மாதங்களுக்கு முன்பே தெரியும். இதுகாறும் எவ்வளவோ விபரங்கள் திருடப் பட்டிருக்கும். இதனால் விரைவில் மத்திய அரசு ஆதாருக்கு டபுள் நம்பர் சிஸ்டம் கொண்டுவர போகுதாம். முக்கியமற்றவர்களுக்கு (டெலிபோன், வங்கி, கக்கூசு .....) இரண்டாவது நம்பரை தந்தால் போதுமானது.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  டெலிபோன் ஆப்ரேட்டர்ஸ், வங்கிகள்...... இவர்கள் கையில் இவைகளைக் கொடுத்தது தவறு ..

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   நீங்கள் இரண்டாம் கட்ட திருடர்களை சொல்கிறீர்கள். ஆனால் முதல் கட்ட முட்டாள்களை மறந்து விட்டீர்கள். ஆதார் விவரங்கள் வாங்க, திருந்த வைத்திருக்கும் லட்சக்கணக்கான மையங்கள் தனியார் வசம் ஒப்பந்த ஊழியர்களால் நடத்தப்படுகிறது. மிக மிக பலவீனமான பாதுகாப்பு. ரூ 500 க்கு அனைத்து விவரங்களும், கைரேகை, கருவிழி படம் உள்பட பதிவிறக்கம், மற்றும் பிரிண்டும் செய்யமுடியுமென்று காட்டினார் ஒரு பெண் பத்திரிக்கையாளர். வசதியாக அந்த செய்திகளை எல்லாம் நல்ல பத்திரிக்கையில் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.

 • yaaro - chennai,இந்தியா

  data is encrypted. your fingerprints and iris data are all encrypted. when a scanner send the tem your fingerprint, it merely matches and gives basic data, not all data. All the "leaks" till now are just demographic data that is not really private or protected by encryption.

 • Kailash - Chennai,இந்தியா

  நம் தகவல்கள் அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர் பாதுகாப்பு இல்லை ஆதார் விபரம் ஏன் தனியாரிடம் செல்லவேண்டும்? இப்போது அதற்க்கு பதில் virtual ID கொண்டுவரப்போகிறார்களாம் அதில் பிரச்னை வராதா? விபரமானவர்கள் அதை உருவாக்கி கொண்டு அவர்களின் விபரம் இனி வெளியேறாது... சாமானியன் அதை உருவாக்கி வைத்துக்கொள்ளுவது சாத்தியமா?

 • அப்பு -

  நம்ம ஆளுங்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியாக்காரன் வந்து சொன்னாத்தான் உறைக்கும். அதுவரை ஏதோ ஆதார் ஏழுகடல், ஏழு மலகளை தாண்டி பத்திரமாக இருக்குன்னு பீலா வுட்டுக்கிட்டு இருந்தாங்க. எனக்குத் தெரிந்தவரை எல்லாத் தகவல்களும் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு போயாச்சுன்னு தோணுது.

 • Ravi Chandhar - Coimbatore,இந்தியா

  நீங்க என்ன சொன்னாலும் ஆன்டி இந்தியன் தான்... H .R- வால ஒரு ஆணியும் புடுங்க முடியாது... என்ஜாய்

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  எப்பொழுது புறம்போக்கு தனமாக கைவிரல் ரேகையை எடுக்க JIO போன்றவர்கள் ஆரம்பித்தார்களோ அப்பொழுதே ஆதார் ஆட்டம் கண்டுவிட்டது. குரங்கு கையில் பூமாலை.

 • Kailash - Chennai,இந்தியா

  டிஜிட்டல் என்றாலே பாதுகாப்பு குறைபாடு இருக்க சந்தர்ப்பம் உள்ளது. வல்லவனுக்கு வல்லவன் உண்டு... அமெரிக்காவில் இப்படி தனியார் கையாள முடியாது அனைத்து department அங்கு தனியாரிடம்.. நாட்டின் பாதுகாப்பு மற்றும் குடிமகன் விபரம் மட்டுமே அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவில் இதே போல உள்ள SSN எண்களில் இது போல virtual டெக்னாலஜி போன்ற அதிமேதாவித்தனம் எல்லாம் செய்வதில்லை keep it simple என்று உள்ளனர்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஆடத்தெரியாதவளும் ஆளத்தெரியாதவனும் ஒண்ணு.. ஓட்டு போட்டவர் வாயில் மண்ணு..

 • balakrishnan - coimbatore,இந்தியா

  பல நேரங்களில் பலரும் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்று கூறிவருகிறார்கள், சாதாரண சாமானிய மக்களுக்கு இது மிகுந்த தொந்தரவை கொடுக்கும், ஆதார், வங்கி கணக்கு, போன்றவை இணைக்கும்போது பாதுகாப்பு குறைபாடு இருந்தால் அது மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும், சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பாஜக ஆட்சிக்கு வந்தது பின்னால நடந்தது எல்லாமே நல்ல விஷயம்னு நெனச்சா இதில ஒவ்வொரு வெசயமும் ரொம்ப கொழப்புதுலயே முடியுதே நைனா?நாம ஏமாந்துட்டோமா இல்ல நம்ம ஏமாத்தப்படறோமா???

  • MuruganSolaimalai - ,

   Current rule in simple words. Gap between Technocrats and Politicians are widening by every passing day. Policies are made decisions are taken without competent knowledge. Even all our digital transactions are extremely vulnerable for cheats to exploit.

 • Sami - Tirupur,இந்தியா

  Finally stupid govt agreed it. All time people must hang with any kind of sticker on forehead.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  பி ஜெ பி அரசு வேண்டுமென்றே இந்த விடுதல்களை செய்து உள்ளது. அதிலும் மோடி தானே இந்த குறைபாட்டை செய்துள்ளார். இதையே காங்கிரஸ் செய்திருந்தால் அதில் குறைபாடே இருந்திருக்காது. அவர்கள் ஆட்சிக்காலத்தில் இந்த நடவடிக்கையை எடுக்க காத்திருந்தனர். ஆனால் அப்போது முகூர்த்தம் சரியில்லாமல் போய் விட்டது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  ஏற்கனவே தேசத்தின் தனிநபர் விபரங்கள் தேசத்தின் பணக்காரர்களுக்கு விற்கப்பட்டுவிட்டன... .பலதரப்பட்ட sms வருகின்றன..

 • Rajesh Rajan - Bangalore,இந்தியா

  சூப்பர். இதை சொல்லேன் ஆன்டி இந்தியன் ஆக்கிடுவாங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement