Advertisement

கடுங் குளிர் நிலவும் சூழ்நிலையில் மீண்டும் டோக்லாமில் சீனா அடாவடி

புதுடில்லி: சீனாவின் டோக்லாமில் சீனபடைகள் மீண்டும் குவிக்கப்பட்டுள்ளதால்,பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் சிக்கிம்,பூடான், திபெத் நாடுகள் எல்லையில் டோக்லாமில் சீன மக்கள் ராணுவபடையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென இந்திய எல்லைக்குள் நுழைந்து சாலைப்பணிகளை மேற்கொண்டனர்.இதனால் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. 70 நாட்களுக்குமேல் நீடித்த இந்த சம்பவம்முடிவுக்கு வந்தது.இந்நிலையில் டோக்லாமில் மீண்டும் சீன மக்கள் ராணுவப்படையினர் 8000 முதல் 9000 வீரர்கள் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று பேட்டியளித்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், சீனாவின் டோக்லாமில் இரு தரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டுள்ளன என்றார். அவர் பேட்டியளித்த 24 மணி நேரத்திற்குள்ளாக கடும் குளிர் நிலவிவரும் நிலையில் சீனா மீண்டும் அடாவடியாக படைகளை குவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

  • K.Sugavanam - Salem,இந்தியா

    அடுத்த சீன விஜயத்தின் போது அமைதி திரும்பும்,வழக்கம் போல..

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    கடும் குளிர் சீனாவில். இந்தியாவில் அந்த குளிர் மிதமாக இருக்கிறது என்ற காரணத்தினால் , சீன ராணுவத்தினர் இந்தியாவின் உள்ளே சிறிதுகாலம் தங்கிச்செல்லலாம் என்று நினைக்கின்றனர்.

    • K.Sugavanam - Salem,இந்தியா

      அவர்களுக்கு தேவையான வசதிகளை இனி செய்துகொடுப்பதே நமது கடமை இன்னும் சொல்லிடுவாங்க போல,நண்பரே..

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

    விரட்டி அடிங்க. ஒருத்தன் அடங்கியாச்சி. இவனும் அடங்குவான்

    • K.Sugavanam - Salem,இந்தியா

      இப்புடி சொல்லியே ரணகளப்படுத்துங்க நம்ப மந்திரியையும்,சேனாதிபதியையும்..

  • JOKER - chennai,இந்தியா

    ஏற்கனவே தினம் தினம் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லையில் தொல்லை . இதுல இவனுங்க வேற .பாக்கி கூட பேசி வச்சி பிளான் பண்ணி கோழைத்தனமா வேலை பார்க்கும் சப்ப மூக்கனுக்கு ஒரு பெரிய அடியா குடுத்தா எல்லையில் வாலை ஆட்டாம நம்ம பின்னாடி ஒடுங்கி வந்துருவான் .

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

    இது எல்லா கதைக்காகாது நைனா,,டோக்லாம் பகுதில ஒன்னு அவன் இருக்கனு இல்ல நாம இருக்கனு.பேச்சுவார்த்தை தீர்வு எல்லா நாம வாரிசுகளோட வாரிசுகள் வந்தாலும் இந்த பிரச்சனைல தீராது நைனா...

  • K.Sugavanam - Salem,இந்தியா

    அடப்பாவமே..முதலில் அவங்களை விரட்டி அடிங்க...அடாவடிக்கு அடாவடிதான் சரி..

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    நம் நாட்டு ஏவுகணைகளும் ராக்கெட்டுகளும், அதே போல, அவிங்க ஆயுதங்களும், முட்டி மோதும் நிலை வரக்கூடாது என, நாம் இறைவனை வேண்டுவோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement