Advertisement

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில்,தேனி பங்களாமேட்டில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முகமதுஅலி ஜின்னா முன்னிலை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை குறித்து விளக்கினர்.
சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய விதிகளின் அடிப்படையில் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.ஏழாயிரத்து 850 வழங்க வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகளான குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, பொங்கல் போனஸ் உள்ளிட்டவைகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் தனுஷ்கோடி, பழனி, முருகன், சுப்பிரமணி, ஆண்டவர், முருகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் பவுன்தாய் நன்றி தெரிவித் தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement