Advertisement

வட கொரியா- தென்கொரியா மீணடும் ஹாட்லைன் வசதி துவக்கம்


சீயோல்: வடகொரியா- தென்கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் போன் வசதி இயங்க துவங்கியுள்ளது.
வடகொரியா ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியாவிற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், நேற்று வட கொரியா அதிபர் கிம் ஜோங், வடகொரியா,- தென் கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் தொலை பேசி வசதியை துவக்கிட உத்தரவிட்டுள்ளார். இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த ஹாட்லைவன் தொலை பேசி 2016-ம் ஆண்டு துண்டிக்கப்பட்டது. இன்று மீண்டும் துவக்கப்பட்டது அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பட்டன் என் கட்டுபாட்டில் உள்ளது என வடகொரியா- அமெரிக்க அதிபர்கள் மாறி மாறி அறிக்கை போர்விட்டு வந்த நிலையில், வடகொரியாின் இரு தரப்பு நாட்டு அதிகாரிகள் சுமார் 20 நிமிடம் தொலை பேசி வாயிலாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • டுமீலிசை பாஸ்கர் - Singapore,சிங்கப்பூர்

    அனாஷ்மிக்கா..

  • vnatarajan - chennai,இந்தியா

    தன்னை தயார் படுத்திக்கொள்ள புலி பதுங்குகிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. அமேரிக்கா உஷாராக இருக்கவேண்டும்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    வட கொரியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பண உதவி செய்யும்.

  • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

    இவரின் புன்னகையின் பின்னால் தைரியம்,இருக்கு.... அமெரிக்காவை ஆட்டி படைப்பதில்.. இந்த இளைஞன் தெளிவாக இருக்கார்..

  • நான் தமிழன் - Riyadh,சவுதி அரேபியா

    எவ்வளவு பெரிய யானையாக இருந்தாலும் எறும்பு காதில் புகுந்து குடையுது, நன்று

  • Sadhana - madurai,இந்தியா

    இதில் ஏதேனும் உள்குத்தும் இருக்கலாம் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை ..

  • ராமன் அப்துல்லா - Vizhuppuram,TN,இந்தியா

    அமெரிக்காவிற்கு வடகொரியா மேல் ஒரு கிலி..

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ///வட கொரியா- தென்கொரியா மீண்டும் ஹாட்லைன் வசதி துவக்கம்///. - அதாவதுங்க, "தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடுங்க", இதை கேள்விபட்டு இருக்கிறீங்கிளா?. சரி என்றால், அப்போ, இதன் அர்த்தம் உங்களுக்கு புரியுங்கோ.

  • Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ

    The worst game is going to vanish humanity is political games.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement