Advertisement

பாக்.,குடன் பேச்சு: ராணுவ தளபதி நிபந்தனை

ஜெய்ப்பூர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவை தருவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
'இந்தியாவுடன் அமைதி பேச்சு நடத்த, பாக்., அரசு முன்வந்தால், அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க தயார்' என, பாக்., ராணுவம் அறிவித்துள்ளது. 'தற்போதைய சூழலில், இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண, போர், சிறந்த வழிமுறை ஆகாது' என, கூறியுள்ள அந்நாட்டு ராணுவம், அமைதி பேச்சு நடத்தும்படி, அரசுக்குஆலோசனை வழங்கி உள்ளது.
இது தொடர்பாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அப்போது தான் அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என நாங்கள் கூற முடியும். உறவு மேம்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எதிர்தரப்பு என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதை பார்க்க வேண்டும். காஷ்மீரில் பயங்கரவாதம் பரவுகிறது. இதற்கு பாகிஸ்தான் காரணம். இதனை பார்க்கும் போது அந்நாடு உண்மையில் அமைதியை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (14)

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  @Mariappa T - indore,இந்தியா தேச துரோகிகள் முதுகுல குத்த தயாரா இருக்காங்க. ராணுவத்தின் கையை கட்டிபோட்டுட்டு ராணுவத்தையே பழிக்கிறவங்க. இந்த தேச துரோகிகளை மொதல்ல பத்தி விடணும்

 • Mariappa T - INDORE,இந்தியா

  நாம் ஒருகாலமும் பேச்சு வார்த்தை நடத்த போவதில்லை என்பதையே காட்டுகிறது. இந்த விஷயத்தில் நாம் நமது வீரத்தை முன்வைக்காமல் நமது விவேகத்தை முன்வைத்து பிரச்னையை சரி செய்யவேண்டும். இதிலிருந்து நமது ராணுவம் பாகிஸ்தான்தான் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் நம்மால் அதை தடுத்து நிறுத்த முடியாது எனபதை ஒப்புக்கொள்கிறது. பிரச்சனை தீர்வு காண வேண்டுமென்றால் நாம் நமது விவேகத்தை பயன்படுத்தி சாத்திய பட வைக்க வேண்டும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  பாக்குடன் பேச்சுவார்த்தை , வெத்திலையுடன் உடன்பாடு சுண்ணாம்புடன் வீராப்பு ,புகையிலையுடன் கத்தி சண்டை எல்லாம் இருக்கட்டும் , காணாமல் கடலில் 21 நாளாக தவிக்கும் ஒக்கி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கடலில்இ தொலைந்துபோன இந்ந்திய மீனவர்களை கண்டுபிடியுங்க முதலில் .

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   புயல் எச்சரிக்கை எல்லாத்தையும் மீறி போவாங்க. அப்புறம் பாதிரியார் எல்லாரையும் வெளியூர் போயி தலைமறைவாக இருக்க சொல்லி ரோசனை சொல்லுவாரு. இந்தமாதிரி அரபி ஐரோப்பா அடிமை வந்து நல்ல புள்ள வேஷம் போடும்.

 • Veeraiyah[Modi Piriyan] - KUALA LUMPUR,மலேஷியா

  தொப்பியை நேராக வைத்து கம்பீரமாக காட்சிதரவேண்டிய ராணுவ தலைமை பதவி.. என்ன கொடுமைடா சாமி ..

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   நம்ம ராணுவ தளபதி, அவர் கொடுக்கிற பாதுகாப்பில் வாழ்ந்துட்டு அவரையே கேலி செய்யற நீ அரபி அடிமையாத்தான் இருக்கணும். ராணுவத்துல ஒவ்வொரு படைக்கும் ஒவ்வொரு விதமா உடுப்பு இருக்கும். இந்த தொப்பி இப்படித்தான் வெக்கணும். இவரு மிகப்பெரிய அதிகாரி. நாலு நட்சத்திரம். இவருக்கு உடுப்பு மாட்டி தொப்பி வெக்கிறத்துக்கு மூணு வீரர்கள் இருப்பாக. சொல்ல வந்துட்டான். இவரை கேலி செய்யற நீ தேச துரோகிதான். போடா பாகிஸ்தானுக்கு

  • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

   விவரம் புரியாமல் உளறக்கூடாது. தொப்பியை அப்படி அணிவது ஒரு முறை..

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   எப்படியோ தொப்பிபோட்டிருக்கிறார். விடுங்க அவரு மோடிபிரியன் வேற.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஆரம்பத்திலேயே தடை போடாமல், பாக்குடன் பேச்சுவார்த்தை நடக்கும் போது இந்த நிபந்தனையை வைக்கலாமே..

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   @தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா: அவனோட பேசவே வேண்டாம். ஜெயிச்சு அடக்கணும் அம்புடுதேன். பாக்கிகளை சமாதானம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நம் நாட்டுக்குள்ள இருந்து எதிரிக்கு சப்பை கட்டு கட்டுற ஒண்ணா மாதிரி ஆளுங்களாத்தான் பாரதம் இப்படி மோசம் ஆயிட்டு.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   இதுபோன்ற போக்கு மற்ற நாடுகளால் தவறாக எடுத்துக்கொள்ளப் படும். பாக் அமைதியை விரும்பினாலும் இந்தியா விரும்பவில்லை என்று சொல்லப்படும்.

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

   மத்த நாடுகள்ட்ட நல்ல பேரு சம்பாரிச்சு என்னத்த செய்ய? ஐ நா சபையிலே நமக்கு சாதகமா ஒட்டு போடுறானா? பாக்கிய தடுத்து நிருத்தரானா? இல்லையில்லை, போடா போக்கத்தவனே ன்னு விட்டுட்டு அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நெனப்பான் னு யோசிக்காம, அடக்கணும் பாக்கிய. கெட்ட பேரு வந்தா என்ன? கெட்ட பேருதான் பாக்கிக்கு அவனுக்கு என்ன கொறைஞ்சு போச்சு? மதிகெட்டவனோடு வாக்குவாதம் செய்யறது மதியீனம். வெற்றி பெற்றால் நல்ல பேரு தானா வரும்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   தமிழ் வேல் சொல்வது சரியானது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement