Advertisement

அட்வைஸ் சொன்னா கேட்காதீங்க - தொகுப்பாளர் ரியோ ராஜ்

நக்கல் பேச்சு, நையாண்டி சிரிப்பு என, எல்லோருக்கும் பிடித்த 'வி.ஜே.,', தான், இன்று நம்ம வீட்டு பிள்ளை 'சரவணன்', பியூட்டி முதல் பாட்டி வரை எல்லோருடைய மனதையும் திருடியவர் தொகுப்பாளர் ரியோ ராஜ். தினமலர் வாசகர்களுக்காக அவர் மனம் திறந்ததாவது...


* 'டிவி' வாய்ப்பு?
நண்பர்கள் மூலம் 'டிவி' சேனலுக்கு ஆடிஷன் சென்றேன். அதுல வாய்ப்பு கிடைத்தது.


* நடிக்கும் வாய்ப்பு?
'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாட்டு சேனலில்
தொகுப்பாளராகும் வாய்ப்பும் ஏற்பட்டது. 'சத்ரியன்' படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்தேன். 'சரவணன் மீனாட்சி' சீரியலிலும் நடிக்கிறேன்.

* ரசிகைகள் அதிகமாமே
யார் கூறியது? ஆண் ரசிகர்களும் உள்ளனர். பெண்களுக்கு பிடித்த மாதிரி, அவங்க வீட்டு பையன் மாதிரி இருப்பதால் என்னவோ, எனக்கு கொஞ்சம் கூடுதலாக பெண் ரசிகைகள் உண்டு.

* அடுத்து ஹீரோவா
அது தெரியலைங்க. நடக்கும் போது நடக்கட்டும். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ரொம்ப நாளாக பிசினஸ் பண்ணனும்னு தாங்க ஆசை.

* தல ரசிகராமே
நடிகர் அஜித்தை பிடிக்கும். அவருடன் எப்படியாவது நடிக்கணும் என்ற ஆசை உண்டு.
கதாநாயகிகளில. ஹன்சிகாவை பிடிக்கும்.

* திருமண வாழ்க்கை?
காதலித்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டு, செல்லமா, சின்னச் சின்ன
முட்டல், மோதல்களுடன் சூப்பரா போய்ட்டு இருக்கு வாழ்க்கை.

* வீட்டில் எப்படி
நம்மள கண்டுக்குறதே இல்லங்க. ஆனா, என்ன தப்பு பண்ணினாலும் வீட்டில் கூறி விடுவேன்.
அதனால் விட்டு வச்சுருக்காங்க.

* பசங்களுக்கு ஏதாவது...
அட்வைஸா... அதுக்கென்ன காசா பணமா... சொல்லிட்டா போச்சு... யார் பேச்சையும்
கேட்காதீங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணுங்க. நானெல்லாம் யாராவது அட்வைஸ் பண்ணினா கேட்கவே மாட்டேங்க. இப்ப நானே உங்களுக்கு அட்வைஸ் சொல்லுறேன், கேட்காதீங்க.

* காதலுக்கு ஒரு மரியாதை?
காதலிக்கோ, காதலனுக்கோ உண்மையா இருங்க. நான் பெருசா.. நீ பெருசாங்குற ஈகோவை மட்டும் விட்ருங்க. ஏன்னா... காதல் புனிதமானது.
இவரது தொடர்புக்கு: rioraj.infotechgmail.com

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement