Advertisement

மாநில அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் பங்கேற்பு

கரூர்: சென்னையில் நடக்கவுள்ள, மாநில அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களை, சி.இ.ஓ., வழியனுப்பி வைத்தார். கரூர், என்.எஸ்.என்., கல்லூரியில் சென்னையில் நடக்கும் மாநில அறிவியல் கண்காட்சிக்கான தேர்வு போட்டி நடந்தது. 180 பள்ளிகள் பங்கேற்றன. இதில், கரூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், சென்னை சத்திய பாமா கல்லூரியில் நடக்கவுள்ள, மாநில அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, நேற்று இரவு மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம், 100 மாணவர்கள், 20 வழிகாட்டி ஆசிரியர்கள் புறப்பட்டனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வழியனுப்பி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் ஜான்பாஷா உள்ளிட்ட நிர்வாகி கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement