Advertisement

வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணி: டிச.,15 வரை நீட்டிப்பு: கலெக்டர் தகவல்

கரூர்: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் வரும், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை: கருர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் வரும், 15ல் வரை கால நீட்டிப்பு செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சரிபார்ப்பு பணிகளின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம், இடமாற்றம் செய்ய உரிய படிவங்களில் தகுதியான வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ளவர்களின் பெயர், முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அதில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதை சரி செய்ய படிவம், 8, இறந்து போன மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க படிவம், 7 பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தை சேர்ந்த, வெளிநாட்டில் வாழும் தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் 6ஏ, பெற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement