Advertisement

நெல் காப்பீடு தேதி நீட்டிக்க வலியுறுத்தல்

குளித்தலை: நெல் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் முழுவதும், பாரத பிரதமரின் நெல் பயிர் காப்பீடு செய்ய, வேளாண்மை துறை சார்பில், தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், நெல் விவசாயம் செய்தவர்கள், முழுமையாக காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறையின் அலட்சிய போக்கால், நெல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் காப்பீடு தேதி முடிவுற்றது. மீண்டும், டிசம்பர், 15 தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement