Advertisement

வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க கோரிக்கை

குளித்தலை: விவசாயிகளுக்கு, தொடக்க வேளாண் வங்கிகளில், துரிதமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலை, காவிரி டெல்டா பகுதியில், விவசாயிகள் தீவிரமாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விவசாய பணிக்காக, தொடக்க வேளாண்மை வங்கிகளில், கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் கடன் படிவங்களை பெற்றுக் கொண்டு, கடன் வழங்குவதில் வங்கி செயலாளர்கள் மெத்தனம் காட்டி வருவதால், கடன் வழங்குவதில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. விவசாய கடனை விரைந்து வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement