Advertisement

கிரிவலம் தார்ச்சாலை செப்பனிடப்படுமா?

குளித்தலை: அய்யர்மலை கிரிவலம் தார்ச்சாலை, செப்பனிட வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்சாயத்து, அய்யர்மலை சுற்றியுள்ள கிரிவல தார்ச்சாலை மிகவும் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. பவுர்ணமி கிரிவலம் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி வருவர். மேலும், மலையை சுற்றியுள்ள கிராமத்திற்கு பொது மக்கள், இந்த தார்ச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பழுதடைந்த தார்ச்சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement