Advertisement

ஊதிய உயர்வு, மருத்துவப்படி கேட்டு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு, மருந்துவப்படி, ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு, ஊதியக்குழுவில் எந்தவித அறிவிப்பும் இல்லை; இவைகளை நிறைவேற்றக்கோரி ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் காத்தமுத்து, தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் சாமுவேல் சுந்திரபாண்டியன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத்தலைவர் மகாவிஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement