Advertisement

மழை தண்ணீரில் ஐந்து நாட்கள் மூழ்கிய நெற்பயிர், வாழை

குளித்தலை: குளித்தலை பகுதியில், மழை தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர் கரை சேறுமா? என்ற சோகத்தில் விவசாயிகள் உள்ளனர். குளித்தலை பகுதியில், கடந்த வாரம் பெய்த மழையில், வடிகால் முறையாக தூர் வாரப்படாததால், நெல், வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மேட்டு மருதூர், பரளி, மருதூர், குமாரமங்கலம், ராஜேந்திரம் உட்பட பல கிராமங்களில், ஐந்து நாட்களாக தண்ணீரில் பயிர்கள் மூழ்கியது. இதில், ஐந்து மாத நெல் பயிர்கள், மீண்டும் நோய் தாக்கமின்றி வந்து விடும். மூன்று மாத குறுவை நெல் பயிர்கள், மீண்டு வருவது மிகவும் சிரமம் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். இதேபோல், மூழ்கிய தண்ணீரால் வாழை தோட்டத்தில், ஒரு வாரத்திற்கு எந்தவிதமான வேலையும் செய்ய முடியாது; வாழை சாய்ந்து சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement