Advertisement

விபத்தில் தம்பதியர் படுகாயம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் டூவீலர் மீது, லாரி மோதியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். ஈரோட்டைச் சேர்ந்த தம்பதியர் ஜெகதீஸ், 45, கண்ணம்மாள், 41. தனியார் நிறுவன பணியாளர்கள். இருவரும், நேற்று முன்தினம் மதியம், 2:45 மணிக்கு டி.வி.எஸ்., மொபட்டில், குமாரபாளையம் புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே வந்தனர். அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மொபட் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுனர் தலைமறைவானார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement