Advertisement

புகார் பெட்டி - நாமக்கல்

சாக்கடை கால்வாயை ஆழப்படுத்தணும்! மல்லசமுத்திரம், ஆறாவது வார்டு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன் அமைந்துள்ள பிரதான சாலையோரத்தில், 1982ல் ஒருபுறத்தில் மட்டும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. அதன்பிறகு, இரண்டு முறை சாலை விரிவாக்க பணிகள் நடந்ததால், கால்வாய் உள்வாங்கியது. கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே அடைத்துக் கொண்டு நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.ரமேஷ், மல்லசமுத்திரம்.


இருக்கைகளை சீரமைக்க வேண்டும்: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இருக்கைகள் அமைக்கப்பட்டன. அவை, நாளடைவில் களவாடப்பட்டன. அதற்கான குழாய்கள் மட்டும் உள்ளன. பயணிகள் நீண்ட நேரம் நின்றபடி, காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பல இருக்கைகள் சேதமடைந்துள்ளன. குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் அவதிக்குள்ளாகின்றனர். புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும்.
- த.கார்த்திக், குமாரபாளையம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement