Advertisement

குஜராத் முதல்கட்ட தேர்தலில் கோடீஸ்வரர்கள்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள சட்டசப தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் நாளை டிச.,9 முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்., சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் 70 சதவீதம் பேரும், பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் 78 சதவீதம் பேரும் கோடீஸ்வரர்கள் என தங்களது சொத்துகணக்கு தாக்கல் விவரத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் காங்கிரஸ் வேட்பாளர்களில் மூன்று பேர், பா.ஜ., சார்பில் 2 பேர் ஆகியோர் 100 கோடிரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை கொண்டுள்ளனர். தற்போது மாநில முதல்வராக உள்ள விஜய்ரூபானி 3.4 கோடி ரூபாய் சொத்துமதிப்பை காட்டி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குரு தன்னுடைய சொத்து மதிப்புரூ. 141 கோடி என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2012-ம் தேர்தலில் போட்டியிட்ட பலரும் தற்போது மீண்டும் பேட்டியிடுகின்றனர். அவர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்காகி குறைந்த பட்சம் ரூ.50 கோடி முதல் ரூ.15 கோடி க்கு மேல் சொத்துமதிப்பு இருப்பதாக சொத்து விவரங்களில் தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிடும் குஜராத் அரசியல் வாதிகள் தங்களின் சொத்து மதிப்பை வெளிப்படையாக தெரிவிப்பது தங்களின் தகுதியை காட்டுவதாக கருதுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    பெருநகரங்களில் ஒரு பிளாட் வைத்திருப்பவர்களே கோடீஸ்வரர்கள்.

  • Rajan - chennai,இந்தியா

    குஜராத் மாநிலத்தில் கோடீஸ்வரர்கள் MLa வேட்பாளர்கள் என்பது ஆச்சர்யம் இல்லை... அது ஒரு தொழில் சார்ந்த மாநிலம்..நம் ஊரிலேயே கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் ..அது தான் ஆச்சர்யம்...அதுவும் வெறும் விவசாயிகள் என்று தொழில் போட்டுகொண்டு....

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    உண்மையில் இவர்கள் தங்கள் சொத்துக்களின் மதிப்பை சொல்லுகிறார்களா? அல்லது வென்றபின் அவர்களின் டார்கெட் என்ன என்று சொல்லுகிறார்களா?

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    எல்லாம் தெரிந்தது தானே சார்.தேர்தல் ஒரு வியாபாரம்.போட்ட முதலுடன் கந்து வட்டி ,மீட்டர் வட்டிக்கு மேல் பணம் சம்பாதித்து விடுவார்கள்.இதில் மாமூல் வேறு.இதனால்தான் வேட்பாளர்களில் பெரும்பாலோர் கோடிகளும்,கேடிகளுமாக இருக்கிறார்கள்.இதில் ஏழைகளுக்கும் ,நல்லவர்களுக்கும் இடமேது?

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் இவர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதில் தவறொன்றும் இல்லை . ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் , பதவியை வைத்து soththu சேர்ப்பது , வருமானம் பார்ப்பது என்று இல்லாமல் இருந்தால் சரி.

  • மணி மாறன் - chennai,இந்தியா

    ஆகா மொத்தம் கோடிஸ்வரனுங்க எல்லாம் MLA ஆகி பிச்சைக்கார மக்களை ஆள போறாங்க.சபாஷ்..வாழ்க இந்திய ஜனநாயகம்....

  • krishnan - Chennai,இந்தியா

    இந்த பணம் எல்லாம் யாரை சுரண்டி சம்பாதித்தது . ஏழைகளே இல்லயா அவர்கள் யாரையும் எந்த கட்சியும் நிறுத்தாதே

  • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

    இந்த தேர்தலில் மோடி முடிவுகள் வரும். குஜராத் வளர்ச்சி என்று சொல்லு இன்ரு

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    தேர்தலில் சொத்துக்கணக்குக் காண்பிப்பது வெறும் போலி நாடகமாகிவிட்டது துணைவி இணைவு பிணைவி என .. பினாமிகள் பெயரில் சொத்துக்களைக்குவித்துவிட்ட பிறகு என்ன கணக்கு காட்டி என்ன பயன்? அரசு அதிகாரிகள் மனைவி பெயரில் விவசாய நிலங்களை வாங்கி லஞ்சப்பணத்தை வரியேயில்லாத விவசாய வருமானமாகக் கணக்கு காட்டுகிறார்கள் அதனைத் தடுக்க சட்டம் கொண்டுவர முடியாத நிலை ஏனெனில் அரசு ஊழியர்களை பகைத்துக்கொண்டால் ஆட்சி சில நாள்கூட நிலைக்காது

    • சென்னை பாலன் - Chennai,இந்தியா

      அருமை நண்பரே தங்களை நாங்கள் பார்த்ததில்லை , தங்கள் நாவில் தமிழ் தாய் நடனமாடுகிறாள் . துணைவி இணைவு பிணைவி , ஆகா கேட்கவே தேன்போல் இனிக்கிறது .

    • BoochiMarunthu - Paradise papers,பனாமா

      மத்திய அரசு மாநில அரசு உங்கள் கையில் தானே இருக்கு ஏன் ஒன்னும் பண்ணல ? காங்கிரஸ் அரசு வழக்கு போட்டு பிடித்து வைத்த மாறன் இப்போ வழக்கில் இருந்து விடுதலை . ஏன் பிஜேபி அரசு இணைவி பிணைவி ஆதாரமும் கொடுக்கல ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement