Advertisement

மணல் கடத்திய 4 பேர் கைது

ஒடுக்கத்தூர்: வேலூர் அருகே, மணல் கடத்திய, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் போலீசார். நேற்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒடுக்கத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்தனர். அதில், பத்து யூனிட் மணல் இருந்தது. விசாரணையில், ஒடுக்கத்தூர் கானாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கீழ்கொத்தூரை சேர்ந்த ஆறுமுகம், 30, தினேஷ், 24, பனந்தோப்பு பட்டியை சேர்ந்த ராஜிவ், 28, கும்பல் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த வேங்கப்பன், 22, ஆகியோரை கைது செய்து, டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட, நால்வரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement