Advertisement

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை உதவி பொறியாளர்கள் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், கடந்த, 29ல் முதல் ஷட்டர் திடீரென உடைந்து, 6,000 கனஅடி நீர் வெளியேறியது. அணையின் நீர் மட்டத்தை, 32 அடியாக குறைத்தால் மட்டுமே ஷட்டரை சீரமைக்க முடியும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், 19 அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த, மூன்று நாட்களாக, உடைந்த ஷட்டரை வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் மற்றும் உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோரை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கண்காணிப்பு பொறியாளர் நட்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், கெலவரப்பள்ளி உதவி செயற்பொறியாளர் குமார், கே.ஆர்.பி., அணையின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement