Advertisement

புதர் மண்டியுள்ள தார்ச்சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னகொத்தூரில் இருந்து கங்கோஜிகொத்தூருக்கு, இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பால் வண்டிகள், காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களின் போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில், இந்த சாலையோரத்தில் சமீபத்தில் பெய்த மழையால், செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இவ்வாறு வளர்ந்துள்ள புதர்களால் சாலையில் வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்தும் நடந்து வருகிறது. எனவே, சாலையோரம் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement