Advertisement

போலீஸ் குடியிருப்பில் தேங்கிய குப்பை; தூர்வார வேண்டும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் எதிரே, போலீசார் குடியிருப்பு உள்ளது. இங்கு, 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் இருந்து செல்லும் கழிவு நீர் கால்வாய், பல ஆண்டுகளாக தூர் வாராமல் உள்ளதால், கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பை தேங்கி, அடைத்துள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் இடமாக போலீஸ் குடியிருப்பு மாறியுள்ளது. உடனடியாக கழிவு நீர் கால்வாயை தூர்வார வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement