Advertisement

மாணவி கடத்தல்: வாலிபருக்கு வலை

அரூர்: அரூர் அடுத்த குடுமியாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன், 45, இவரது, 17 வயது மகள், எருமியாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த தனது மகளை, ஒரு வாலிபர் கடத்திச் சென்று விட்டதாக, அரூர் போலீசில், லட்சுமணன் புகார் செய்தார். அதில், 'பஸ்சில் சென்ற தனது மகளை, பேதாதம்பட்டியை சேர்ந்த சரத், 19, என்ற வாலிபர் கேலி, கிண்டல் செய்து வந்தார். இது குறித்து, அவரது ஊரைச் சேர்ந்த பெரியவர்களிடம் சொல்லி கண்டித்ததாகவும், இருந்தும், தொடர்ந்து தனது மகளை சரத் கேலி, கிண்டல் செய்து வந்தார். இதையடுத்து, வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு மகள் கூறியதையடுத்து, அவரை, பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டோம். இந்நிலையில், கடந்த, 18ல், வீட்டில் இருந்த தனது மகளை, சரத், அவரது அப்பா ரவி, அம்மா வேண்டம்மா, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்தியா, அவரது கணவர் சுந்தரம் ஆகியோர் கடத்தி சென்று விட்டனர்' என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement