Advertisement

பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவக்கம்

தர்மபுரி: பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நேற்று துவங்கியது. இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 21 ஆயிரத்து, 619 மாணவர்கள் தங்கள் பள்ளிகளில், தேர்வு எழுதினர்.

தர்மபுரி மாவட்டத்தில், 99 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 63 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம், 162 பள்ளிகள் உள்ளன. இங்கு, 21 ஆயிரத்து, 619 மாணவர்கள், பிளஸ் 2 படித்து வருகின்றனர். இவர் தங்கள் பள்ளிகளில், நேற்று துவங்கிய பிளஸ் 2 அரையாண்டு தேர்வை எழுதினர். இந்த தேர்வு வரும், 23 வரை நடக்கிறது. அரையாண்டு தேர்வு என்ற போதும், அனைத்து பள்ளிகளிலும், பொதுத்தேர்வு போல் கண்காணிக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement