Advertisement

உதவி தொகையை உயர்த்த தெருக்கூத்து கலைஞர்கள் வலியுறுத்தல்

அரூர்: அரூரில், தெருக்கூத்து கலைஞர்கள் நலச்சங்கத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம், சங்க தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதில், 60 வயது பூர்த்தியடைந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு, மாதம்தோறும் அரசு உதவி தொகையாக, 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், நலிவடைந்த நிலையில் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு மாதம்தோறும், 5,000 ரூபாயாக உதவி தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தகுதியுள்ள தெருக்கூத்து கலைஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையும், அரசு பஸ்களில் இலவச பஸ் பாசும் வழங்க வேண்டும். மேலும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும், தெருக்கூத்து கலைஞர்கள் மூலம், டெங்கு விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement