Advertisement

போலி டாக்டர் புகார்: ஆர்.டி.ஓ., சோதனை

கொடுமுடி: சிவகிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், சிலோன் டாக்டர் மருத்துவமனை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இங்கு எம்.பி.பி.எஸ்., டாக்டர் எனக்கூறி கனகரத்தினம், 62, என்பவர் சிகிச்சை அளிப்பதாக, ஈரோடு ஆர்.டி.ஓ.,வுக்கு புகார் போனது. மருத்துவமனையில் ஆர்.டி.ஓ., நர்மதா தேவி, நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டார். கனகரத்தினத்திடம் விசாரித்தபோது, ''நோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளிப்பதில்லை. எம்.பி.பி.எஸ்., படித்த தன் மகன் சதீஸ்குமார், சிகிச்சை அளிக்கிறார்,'' என்றார். சிகிச்சைக்கு காத்திருந்த நோயாளிகளிடம் விசாரித்தபோது, 'கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கனகரத்தினம் தான் சிகிச்சை அளிக்கிறார்' என்றனர்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ., கூறியதாவது: உரிய மருத்துவ படிப்பு படிக்காமல், கனகரத்தினம் சிகிச்சை அளிப்பது குறித்து, கலெக்டர் பிரபாகர், மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் உத்தரவுக்குப்பின், உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.டி.ஓ., அதிரடி ஆய்வால், சிவகிரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement