Advertisement

சென்னிமலை சாலையில் 'ஆறு': குழாய் உடைந்ததால் திடீர் கோளாறு

சென்னிமலை: காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக சென்னிமலை - ஈங்கூர் சாலையில், பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குமரன் சதுக்கம், மேற்கு ராஜா வீதியில், காவிரி குடிநீர் பிரதான குழாய், நேற்று காலை, 12:30 மணியளவில் திடீரென உடைந்தது. இதனால் நீருற்று போல் தண்ணீர் பொங்கி, சாலையில் ஆறாக ஓடியது. பேரூராட்சி ஊழியர்கள், மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். பின், உடைந்த குழாய்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் குடிநீர் வினியோகம் பாதித்தது. நேற்று முன்தினம், கிழக்கு ராஜா வீதியில், ஈஸ்வரன் கோவில் முன் பகுதியில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement