Advertisement

குடிநீர் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை: பவானி அருகே பரபரப்பு

பவானி: பவானி அருகே, குடிநீர் தகராறில், வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பவானி - ஈரோடு பிரதான சாலையில், ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் செல்வம், 39; அதே பகுதியில் உள்ள பொதுக்குழாயில், நேற்று காலை, 7:00 மணியளவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரங்கநாதன், 28; இருவருக்கும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வம் தான் வைத்திருந்த சிறு கத்தியால், ரங்கநாதனை குத்தினார். இதைப் பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்வத்தை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவரை, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அவர் இறந்தார். பெண் கொலையில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற செல்வம், முழு தண்டனை காலம் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியில் வந்தார். இந்நிலையில், குடிநீர் தகராறில், கொல்லப்பட்டதாக சித்தோடு போலீசார் கூறினர். இது தொடர்பாக, நான்கு பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். கொலையான செல்வத்துக்கு, திருமணமாகவில்லை. இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement