Advertisement

அங்கன்வாடி ஊழியர் போராட்டம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, அரியப்பம்பாளையத்தில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்படுகிறது. இந்த, அலுவலகத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் வேலை செய்கின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை, நேற்று மாலை முற்றுகையிட்டனர். ஏழாவது ஊதியகுழுவின், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். காலவரை ஊதியம், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
* பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் வட்ட கிளை தலைவர் பூங்கொடி தலைமையிலும், அம்மாபேட்டை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு வட்டார அங்கன்வாடி பணியாளர் சங்க தலைவர் சாந்தி தலைமையிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement