Advertisement

மணல் கடத்தல் புகாரில் இரவில் சோதனை: கும்பல் தப்பியது; மண்வெட்டி சிக்கியது

கோபி: காவிலிபாளையம் குளத்தில், மணல் கடத்தல் கும்பலை பிடிக்கச் சென்ற அதிகாரிகள், கும்பலை தப்ப விட்ட நிலையில், மண்வெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம் தாலுகா, காவிலிபாளையத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. தனி தாலுகாவானதால், தற்போது, நம்பியூர் தாலுகாவுடன் குளம் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக, புகார் போனது. இதன் அடிப்படையில், நம்பியூர் தாசில்தார் ராணி, வி.ஏ.ஓ., நவாப்ஜான் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம் இரவு சென்றனர். குளத்தின் ஓரத்தில், மணல் குவிக்கப்பட்டிருந்தது. பத்து பேர் கும்பல், பிளாஸ்டிக் பக்கெட்டில் மணலை நிரப்பி, முட்புதர் மறைவில் நின்ற, டிராக்டரில் கொட்டிக் கொண்டிருந்தனர். மறைந்திருந்து கண்காணித்த வருவாய்த்துறையினர், கும்பலை பிடிக்க முயன்றனர். அவர்கள் டிராக்டரை விட்டுவிட்டு மாயமாயினர். டிராக்டரை ஓட்டி வந்தது, அதே பகுதியை சேர்ந்த கமலஹாசன், 30, எனத் தெரிந்தது. டிராக்டர், ஆறு பிளாஸ்டிக் பக்கெட், மூன்று மண்வெட்டிகளை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாலுகா உதயமான பிறகு, இதுதான் முதல் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் வராததால் அதிர்ச்சி: முன்னதாக சோதனைக்கு செல்லும் முன், பாதுகாப்பு கருதி, புன்செய் புளியம்பட்டி போலீசாரை, அதிகாரிகள் அழைத்தனர். ஆனால், தணிக்கை முடிந்தும், ஒரு போலீசார் கூட வரவில்லை என்று, வருவாய் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement