Advertisement

அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி

கோபி: கோபி அருகே மொபெட் மோதியதில், முதியவர் பலியானார். கோபி, வெள்ளாளபாளையம் பிரிவு அருகே, நேற்று முன்தினம் இரவு, 75 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்றார். அப்போது டி.வி.எஸ்., எக்சல் மொபெட் மோதியதில், சம்பவ இடத்தில் அவர் பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்தியது, கோபி அருகே, நாகர்பாளையத்தை செர்ந்த அப்துல் ரஜாத், 53, என்பது தெரிந்தது. காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement