Advertisement

நிழற்கூடத்தில் கிடந்த முதியவர் இறந்தார்

கொடுமுடி: நிழற்கூடத்தில் மீட்கப்பட்ட முதியவர், மருத்துவமனையில் இறந்தார். ஊஞ்சலூர் அருகே, வள்ளியம்பாளையம் பஸ் நிறுத்த நிழற்கூடத்தில், நேற்று முன்தினம் மாலை, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், உடல் நிலை சரியில்லாத நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர், நேற்று காலை இறந்தார். வேட்டி மட்டுமே அணிந்திருந்த அவர், யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement