Advertisement

சூலாங்குறிச்சி பள்ளியில் சத்துணவு அரிசி விற்பனை: பொதுமக்கள் சாலை மறியலால் சமையலருக்கு காப்பு

கருமந்துறை: கருமந்துறை அருகே, சூலாங்குறிச்சி பள்ளியில், சத்துணவு அரிசியை விற்ற சமையலரை சிறைபிடித்து, மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம், பெரியகல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி, சூலாங்குறிச்சி உறைவிடப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தலைமையாசிரியரை தவிர, இதர ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. இங்கு, சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ், 39, சமையலராக பணிபுரிகிறார். இவர், இருப்பு அரிசியை, அடிக்கடி கள்ளத்தனமாக வெளியில் விற்று வருகிறார் என, குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, பாக்கியராஜை, மக்கள் சிறைப்பிடித்து, அவரிடமிருந்து, 35 கிலோ அரிசி சிப்பத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கிணத்தூர் - கருமந்துறை சாலையில், 100க்கும் மேற்பட்ட மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ஷபிஉன்னிஷா, ஏத்தாப்பூர் போலீசார் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், சமையலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர். பின், கரியகோவில் போலீசார் விசாரித்து, பாக்கியராஜை கைது செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement