Advertisement

பெரியகிருஷ்ணாபுரம் ஏரி அருகே சாலை அமைக்கக்கோரி பா.ஜ., மனு

பெத்தநாயக்கன்பாளையம்: சாலை அமைக்கக்கோரி பா.ஜ.,வினர் மனு அளித்தனர். பெத்தநாயக்கன்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம் ஏரிக்கரையையொட்டி, மக்கள் பயன்பாட்டுக்கு சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, பா.ஜ., ஒன்றிய அமைப்பாளர் ஜீவானந்தம், நேற்று, பி.டி.ஓ.,விடம் மனு அளித்தார். அதில், 'பெரியகிருஷ்ணாபுரம் ஏரியின் வடமேற்கு பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள், ஊருக்குள் வர பயன்படுத்தப்படும் தடம், மிக மோசமாக உள்ளது. இதனால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், அப்பகுதியில் மண்சாலை அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement