Advertisement

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிரிழப்பு

இடைப்பாடி: கிணற்றோரம் மேய்ந்த பசுமாடு, தவறி விழந்து இறந்தது. இடைப்பாடி அருகே, வெள்ளரிவெள்ளியைச் சேர்ந்த பெண் மணி, 65. இவர், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், இரு சிந்து இனபசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ராமலிங்கத்துக்கு சொந்தமான விவசாய கிணற்றில், ஒரு பசு மாடு தவறி விழுந்தது. இதுகுறித்து, இடைப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு, மக்கள் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், பசுமாட்டை மீட்டனர். ஆனால், தலைகுப்புற விழுந்ததில், கழுத்தில் அடிபட்டு, மாடு உயிரிழந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement