Advertisement

அரசு கட்டடங்கள் கட்ட நிலம் தேர்வு: டி.ஆர்.ஓ., ஆய்வு

சங்ககிரி: சங்ககிரி அருகே, அரசு கட்டடங்கள் கட்ட, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் ஆய்வு செய்தார். தேவண்ணக்கவுண்டனூர், குப்பனூர் பைபாஸ் அருகே, தீயணைப்பு நிலைய அலுவலர், பணியாளர்கள் குடியிருப்பு, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவரங்கம்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, வேளாண் விற்பனை கிடங்கு கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை, டி.ஆர்.ஓ., சுகுமார், நேற்று, ஆய்வு செய்தார். அப்போது, கட்டடங்கள் கட்ட அனுமதி கொடுக்கலாம் என, ஆர்.டி.ஓ., ராமதுரைமுருகனிடம் தெரிவித்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement