Advertisement

சங்கிலி பறித்த கொள்ளையன் ஏட்டை தாக்கி தப்ப முயன்றும் சிக்கினான்

சேலம்: பெண்ணிடம், சங்கிலி பறித்து ஓடிய கொள்ளையன், பிடிக்க முயன்ற போலீசாரை, கர்லா கட்டையால் தாக்கியும், வசமாக சிக்கினான்.

சேலம், கொண்டலாம்பட்டி, மிஷின்காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி, 37. நாமக்கல்லில் நடக்கும் உறவினர் திருமணத்தில் பங்கேற்க, நேற்று காலை, 7:45 மணிக்கு புறப்பட்டார். அழைத்துச்செல்ல, உறவினர் வருவதாக கூறியதால், கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே, பாலத்தில் நின்றிருந்தார். அப்போது, மொபட்டில் வந்த மர்ம நபர், வசந்தி அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்த அவர், ஒரு கையால் சங்கிலியை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால், கொள்ளையனை பிடித்தபடி, கத்தி கூச்சலிட்டார். மக்கள் திரண்டதால், கொள்ளையன் வேகமாகச் சென்றுள்ளான். அந்த வழியாக, மொபட்டில் ரோந்து வந்த, கொண்டலாம்பட்டி ஏட்டு தனசீலன், கொள்ளையனை துரத்தியுள்ளார். ரவுண்டானா அருகே, மர்ம நபர், மொபட்டை விட்டு, தப்பி ஓட முயன்றான். ஆனால், தனசீலன் அவனை பிடித்தார். உடனே, மொபட்டில் வைத்திருந்த கர்லா கட்டையை எடுத்து, ஏட்டு தலையில் தாக்கினான். அவர், கட்டையை பிடுங்கி, அவனையும் பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். விசாரணையில், அவன், அன்னதானப்பட்டி, சிவசக்தி நகரைச் சேர்ந்த இளங்கோ, 38, பல்வேறு இடங்களில், நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவனிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement